எவனோ என் அகம் தொட்டு விட்டான் - Final
அத்தியாயம் 62 : பூவில் இருந்து இதழ்கள் உதிர்வது போல்...காலம் என்னும் நாட்காட்டியில் இருந்து ஒரு நாள் உதிர்வதும்...மறு நாள் மலர்வதுமாக...ஆறு மாதங்கள் ஓடிவிட்டிருந்தன...!நித்திலா..இப்பொழுது பூரண குணமடைந்திருந்தாள்.பழைய உற்சாகத்தோடு வலம் வர ஆரம்பித்திருந்தாள். அவள் வேகமாக குணமடைந்ததற்கு...முக்கியமான காரணம் ஆதித்யன் என்றால் மிகையாகாது.அந்தளவிற்கு அவள் உடன் இருந்து கண்ணும் கருத்துமாய் கவனித்துக் கொண்டான்.அவளுக்கு மாத்திரை தருவது...அவளை சாப்பிட வைப்பது...என ஆரம்பித்து இன்னும் பிற தேவைகளையும் அவனே பார்த்துக் கொண்டான். மகளுக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில்...அவளை விட்டு விட்டு ஊருக்குச் செல்ல மனம் வராமல்...ஒரு மாதம் மகளுடன் தங்கி விட்டுத்தான் சென்றார் மீனாட்சி.ஆனால்...நித்திலாவைக் கவனிக்கும் வேலையை...ஆதித்யன் அவருக்கு விட்டு வைக்கவில்லை.மாப்பிள்ளையின் மனமறிந்து...அவரும் இங்கிதமாய் ஒதுங்கிக் கொண்டார். இதில் என்ன விஷயமென்றால்...அவளுக்குத் தேவையான ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்பவன்...மறந்தும் அவளிடம் பேசியிருக்கவில்லை.அவள் பேசினால் மட்டுமே..இவன் பதில்...