இடுகைகள்

எவனோ என் அகம் தொட்டு விட்டான்...!!! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எவனோ என் அகம் தொட்டு விட்டான் - Final

  அத்தியாயம் 62 :   பூவில்  இருந்து இதழ்கள் உதிர்வது போல்...காலம் என்னும் நாட்காட்டியில் இருந்து ஒரு நாள் உதிர்வதும்...மறு நாள் மலர்வதுமாக...ஆறு மாதங்கள் ஓடிவிட்டிருந்தன...!நித்திலா..இப்பொழுது பூரண குணமடைந்திருந்தாள்.பழைய உற்சாகத்தோடு வலம் வர ஆரம்பித்திருந்தாள்.   அவள் வேகமாக குணமடைந்ததற்கு...முக்கியமான காரணம் ஆதித்யன் என்றால் மிகையாகாது.அந்தளவிற்கு அவள் உடன் இருந்து கண்ணும் கருத்துமாய் கவனித்துக் கொண்டான்.அவளுக்கு மாத்திரை தருவது...அவளை சாப்பிட வைப்பது...என ஆரம்பித்து இன்னும் பிற தேவைகளையும் அவனே பார்த்துக் கொண்டான்.   மகளுக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில்...அவளை விட்டு விட்டு ஊருக்குச் செல்ல மனம் வராமல்...ஒரு மாதம் மகளுடன் தங்கி விட்டுத்தான் சென்றார் மீனாட்சி.ஆனால்...நித்திலாவைக் கவனிக்கும் வேலையை...ஆதித்யன் அவருக்கு விட்டு வைக்கவில்லை.மாப்பிள்ளையின் மனமறிந்து...அவரும் இங்கிதமாய் ஒதுங்கிக் கொண்டார்.   இதில் என்ன விஷயமென்றால்...அவளுக்குத் தேவையான ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்பவன்...மறந்தும் அவளிடம் பேசியிருக்கவில்லை.அவள் பேசினால் மட்டுமே..இவன் பதில்...

எவனோ என் அகம் தொட்டு விட்டான் - அகம் 61

  அத்தியாயம் 61:   தீவிர சிகிச்சைப் பிரிவின் கதவையே வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தான் ஆதித்யன்.கலங்கிச் சிவந்திருந்த அவனுடைய கண்கள்...அந்த அறைக்கதவை விட்டு...இம்மியளவு கூட நகரவில்லை.மருத்துவர்களும்...செவிலியர்களும் அந்த அறைக்குள் உள்ளே நுழைவதும்...வெளியே வருவதுமாய் பதட்டத்துடன் அலைந்து கொண்டிருந்தனர்.                             அனைவரது விழிகளிலும் ஒரு பதட்டம்...கவலை குடிகொண்டிருந்தது.இருக்காதா பின்னே...?உள்ளே அடிபட்டுக் கிடப்பது அவர்களது முதலாளியின் மனைவி...!வெளியே இடிந்து போய் அமர்ந்திருப்பதோ...அவர்களது முதலாளி...!ஆம்...!அது ஆதித்யனுடைய மருத்துவமனைதான்...!   சென்னைக்கு அருகில்...அதுவும் அவர்களது மருத்துவமனை இருக்கும் பகுதியில் விபத்து நேர்ந்திருந்ததால் நித்திலாவை உடனடியாக அவர்களது மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்க்க முடிந்திருந்தது.   பைத்தியம் பிடித்தவனைப் போல்...நித்திலாவை கைகளில் தூக்கிக் கொண்டு சாலையில் ஓடிக் கொண்டிருந்தவனை......