இடுகைகள்

ONGOING STORIES

எவனோ என் அகம் தொட்டு விட்டான் - அகம் 61

  அத்தியாயம் 61:   தீவிர சிகிச்சைப் பிரிவின் கதவையே வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தான் ஆதித்யன்.கலங்கிச் சிவந்திருந்த அவனுடைய கண்கள்...அந்த அறைக்கதவை விட்டு...இம்மியளவு கூட நகரவில்லை.மருத்துவர்களும்...செவிலியர்களும் அந்த அறைக்குள் உள்ளே நுழைவதும்...வெளியே வருவதுமாய் பதட்டத்துடன் அலைந்து கொண்டிருந்தனர்.                             அனைவரது விழிகளிலும் ஒரு பதட்டம்...கவலை குடிகொண்டிருந்தது.இருக்காதா பின்னே...?உள்ளே அடிபட்டுக் கிடப்பது அவர்களது முதலாளியின் மனைவி...!வெளியே இடிந்து போய் அமர்ந்திருப்பதோ...அவர்களது முதலாளி...!ஆம்...!அது ஆதித்யனுடைய மருத்துவமனைதான்...!   சென்னைக்கு அருகில்...அதுவும் அவர்களது மருத்துவமனை இருக்கும் பகுதியில் விபத்து நேர்ந்திருந்ததால் நித்திலாவை உடனடியாக அவர்களது மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்க்க முடிந்திருந்தது.   பைத்தியம் பிடித்தவனைப் போல்...நித்திலாவை கைகளில் தூக்கிக் கொண்டு சாலையில் ஓடிக் கொண்டிருந்தவனை......

எவனோ என் அகம் தொட்டு விட்டான் - அகம் 59

  அத்தியாயம் 59 :   அன்று...திவ்யாவைப் பெண் பார்ப்பதற்காக 'தேவ் குடும்பத்தினர்' வருவதாக இருந்தது.அனைத்து ஏற்பாடுகளும் தடபுடலாக நடந்து கொண்டிருந்தன.காலையிலேயே ஆதித்யனின் குடும்பம்...கௌதமின் வீட்டில் ஆஜராகியிருந்தது.வீட்டை அலங்கரிப்பதில் ஆதித்யனும்...கௌதமும் ஈடுபட்டிருக்க...சமையல் வேலைகளை வேலைக்காரர்கள் துணையோடு லட்சுமி ஏற்றுக் கொண்டார்.நித்திலாவும்...சுமித்ராவும் திவ்யாவை தயார்படுத்தும் வேலையில் இறங்கியிருந்தனர்.   சுந்தரம் தாத்தாவும்...கமலா பாட்டியும் வழக்கம் போல் தங்களுக்குள் செல்ல சண்டைகள் போட்டுக் கொண்டிருந்தனர்.இவர்கள் அனைவரையும் கவனித்தபடி...செய்தித் தாளில் மூழ்கியிருந்தார் மாணிக்கம்.   "நான் படிக்க வேண்டும்...!இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம்....!",முரண்டு பிடித்த திவ்யாவை..   "முதலில் மாப்பிள்ளையைப் பார்...!மற்றதெல்லாம் பிறகு பேசிக் கொள்ளலாம்...!",என்று கூறி சமாதானப்படுத்தியிருந்தனர் நித்திலாவும்...சுமித்ராவும்.   இருந்தும் குழம்பிக் கொண்டே தன் அறையிலேயே அடைந்திருந்த திவ்யாவை தனியாக சந்தித்துப் பேசினான் கெளதம்.   "திவி...!உன்னை மீறி எதுவும் நடக்காத...