எவனோ என் அகம் தொட்டு விட்டான் - அகம் 60
அத்தியாயம் 60 : நாட்கள் வேகமாக பறந்து சென்றன...!இன்னும் ஒரு வாரத்தில் திவ்யாவின் திருமணம்...!தேவதர்ஷனின் குடும்ப வழக்கப்படி...அவர்களது சொந்த ஊரான மதுரைக்கு அருகில் உள்ள கிராமத்தில் அமைந்திருக்கும் அவர்களது பூர்வீக வீட்டில்தான் திருமணம் நடக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டிருந்தது.எனவே...ஆதித்யன் மற்றும் கௌதமின் குடும்பத்தினர் திருமணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே அந்த கிராமத்திற்கு சென்று விட்டனர். அன்று நடந்த சம்பவத்திற்கு பிறகு...ஆதித்யன் நித்திலாவை விட்டு விலகியே இருந்தான்.முதலில்...அவனுக்கான வேலைகளை அவள் பார்த்து பார்த்து செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டிருந்தவன்...இப்பொழுது...அவள் அந்த வேலைகளை செய்யாமல் விட்டாலும் 'ஏன்...?' என்று காரணம் கேட்கவில்லை. அதற்காகவெல்லாம்...அவள்..தன் உரிமைகளை விட்டுத் தரவில்லை.ஆம்...!அவளுக்கான கடமைகள் என்று அவன் பட்டியலிட்டதை அவள்...தனக்கான உரிமைகளாக மாற்றியிருந்தாள்.எப்பொழுது அவன் மனம் புரிந்ததோ...அப்பொழுதே...அவன் மீதான அவளது காதல் மனம் விழித்துக் கொண்டு அவன் பக்கம் சாய ஆரம்பித்தது. காலை காபியுடன் அவனை எ...