எவனோ என் அகம் தொட்டு விட்டான் - அகம் 45
அத்தியாயம் 45 :
"ஏகாந்த நினைவும்
எரிகின்ற நிலவும்
என் மேல் ஒரு போர் தொடுக்க....!",
கௌதமின் அறையின் ஜன்னலருகே நின்றபடி ஏக்கமாய் பாடிக் கொண்டிருந்தாள் சுமித்ரா.அவள் மனதில் வேதனை சூழ்ந்திருந்தது.நேற்றிலிருந்து...'கெளதம் தன்னிடம் ஒழுங்காக முகம் கொடுத்துப் பேசவில்லை....!',என்ற நினைவில் அவள் கண்களில் இருந்து இரு நீர் முத்துக்கள் சுரந்து கன்னங்களை நனைத்தன.
தன் தந்தையிடம்...'உங்க பொண்ணுதான் என் பொண்டாட்டி....!',என்று தைரியமாக சவால் விட்டு விட்டு வந்தவன்....இங்கு அலுவலகத்தில் அவளுடன் பேசவே மறுத்தான்....!அவளுக்குப் புரிந்தது....!தன்னை இன்னொருவன் வந்து பெண் பார்த்து விட்டுப் போனதில் அவன் கோபமடைந்திருக்கிறான் என்பதை அவளால் உணர்ந்து கொள்ள முடிந்தது.
இருந்தாலும்....அவனுடைய பாராமுகம் அவளுக்கு ரண வேதனையைத் தந்தது.
'இன்றைக்கு என்ன ஆனாலும் சரி.....!கௌதமிடம் தன் தரப்பு நியாயத்தை சொல்லிப் புரிய வைக்க வேண்டும்....!',என்ற உறுதியோடு அவனது அறையில் காத்திருந்தாள்.
கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்த கௌதமின் விழிகளில்....சோகச் சித்திரமாய் நின்று கொண்டிருந்த சுமித்ரா வந்து விழுந்தாள்.ஜன்னலின் கம்பிகளைப் பிடித்தபடி...இவன் வருகையை அறியாதவளாய்....அநாதரவாய் நின்றிருந்தவளின் கோலம் அவன் மனதை அசைத்துப் பார்த்தது.
அவனுக்கு....அவள் மேல் கோபம் இருக்கத்தான் செய்தது.....!அதே சமயம்...எல்லையில்லாத காதலும் பொங்கிப் பெருகியது....!
சத்தம் எழுப்பாமல் கதவை சாத்தியவன்...அதன் மேலேயே சாய்ந்து நின்றபடி கைகளைக் கட்டிக் கொண்டு....தனக்கு முதுகு காட்டி நின்றிருந்த பெண்ணவளை நோக்க....அவள் அப்பொழுதுதான் அந்தப் பாடலைப் பாடினாள்...!
பாடல் வரிகளில் விரவியிருந்த ஏக்கத்திற்கு சற்றும் குறையாத ஏக்கத்தைத் தன் குரலில் பிரதிபலித்தவளைப் பார்த்தவனின் உதடுகள்....தாமாக....அந்தப் பாடலின் அடுத்த வரியைப் பாடின....அதே அளவு காதலோடு....!
"எனை வந்து தழுவு...
ஏன் இந்த பிரிவு.....?
மானே...வா...
உனை யார் தடுக்க....?",
காதலோடு ஒலித்த தன்னவனின் குரலில்....விசுக்கென்று திரும்பியவள்....அங்கு கெளதம் நிற்பதைக் கண்டு,"மாமா....!",என்ற கதறலோடு ஓடிச் சென்று அவன் நெஞ்சத்தில் விழுந்தாள்.
அவளை மென்மையாக அணைத்துக் கொண்டவன்,"ஷ்....!சுமி.....!அழாதே டா.....!இப்ப எதுக்கு அழற.....?",அவன் குரல்....அவள் காதோரத்தில் காதலாய் ரீங்காரமிட...
அவனுடைய சமாதானத்தில்,"ம்ம்....மா..மா.....!",அவள் இதழ்கள் பிதற்றியதே தவிர....அவள் அழுகை ஓய்ந்த பாடாக இல்லை.
தன் மார்பில் புதைந்து விசும்பிக் கொண்டிருந்தவளை....வலுக்கட்டாயாமாகத் தன்னிடமிருந்து பிரித்தெடுத்தவன்,"சுமி....!இப்போ அழுகையை நிறுத்தப் போறியா....?இல்லையா....?",சிறு கண்டிப்புடன் கேட்க...அந்தக் குரலுக்கு அவளிடத்தில் சற்று மதிப்பு இருந்தது.
தன் அழுகையை நிறுத்தியபடி அவனை நிமிர்ந்து பார்த்தவள்,"என் மேல இருந்த கோபம் போயிடுச்சா.....?",சிறு குழந்தையாய் அவன் முகம் பார்த்து வினவ...
அவன் தேகம் சட்டென்று விரைப்புற்றது."நீ செய்தது ஒண்ணும் சின்னக் காரியம் இல்ல....!அவ்வளவு சீக்கிரம் கோபம் குறையறதுக்கு.....!",என்றவன் அவளை விலக்கி விட்டு விட்டு சென்று தன் இருக்கையில் அமர்ந்தான்.
'கடவுளே.....!அந்தப் பேச்சை எடுத்தாலே...இப்படி இறுகிப் போயிடறாரே....!நான் எப்படி இவரை சமாதானப்படுத்துவேன்.....?",மனதிற்குள் மறுகியவள்...அவனைப் பின் தொடர்ந்தபடியே...
"நான் செய்தது தப்புதாங்க.....!அதுக்காக உங்ககிட்ட நான் பலதடவை மன்னிப்பு கேட்டாச்சு.....!இன்னும் அதையே பிடிச்சுக்கிட்டுத் தொங்குனா....என்ன அர்த்தம்.....?",
"நீ பண்ணி வைச்ச காரியத்துனால....நான் உன்மேல கோபமா இருக்கேன்னு அர்த்தம்.....!",
"ஹைய்யோ.....!கொஞ்சமாவது என்னை புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க.....!",
"நீ முதல்ல என்னைப் புரிஞ்சுக்க முயற்சி பண்ணு டி....!ஒரு ஆணா எனக்கு எப்படி இருக்குது தெரியுமா....?என் பொண்டாட்டியை....இன்னொருத்தன் உரிமையா ரசிச்சிருக்கிறான்...அப்படிங்கற எண்ணமே....ஏதோ மிளகாயை அரைத்து பூசின மாதிரியான உணர்வைத் தருது.....!
கொஞ்சம் யோசிச்சுப் பாரு.....!அன்னைக்கு வந்தவன்...'இவள்தான் நம்ம வருங்கால பொண்டாட்டி....!',அப்படிங்கற எண்ணத்துல...உரிமையா ஒரு பார்வை கூடவா பார்க்காம இருந்திருப்பான்.....?",அவன் தன் மனக்குமுறலை கொட்ட....அவள் ஸ்தம்பித்துப் போய் நின்றாள்.
சுமித்ரா....இதுவரை இப்படியொரு கோணத்தில் சிந்தித்துப் பார்க்கவில்லை....!ஏதோ....காதலில் இயல்பான பொஸஸிவ் குணம்....பிறகு அவனிடம் உண்மையைச் சொல்லாமல் தானே முடிவெடுத்ததால் கோபமாக இருக்கிறான் என்றுதான் இதுவரை நினைத்திருந்தாள்.அவன் கூறிய பிறகுதான்....அவள் செய்த தவறு அவளுக்கு உரைத்தது.
பேச மறந்தவளாய்....சிலை போல் நின்றிருந்தவளைப் புருவம் சுருங்க முறைத்தவன்,"இப்ப நான் உன்கிட்ட ஒரு கேள்வி கேட்கிறேன்.....பதில் சொல்லு டி....?நான் உன்னைப் பார்க்கிற பார்வையில எந்தளவுக்கு ஒரு உரிமை தெரியுது......?என்னுடைய பார்வை....உன்னை எந்தளவுக்கு மேயுது.....?இதே....இந்தப் பார்வையை....நான் வேற ஏதோ ஒரு பொண்ணை பார்த்து....பார்த்து வைச்சா....நீ சும்மா இருப்பியா டி.....?",என்று நியாயம் கேட்க...
"ச்சீ.....!வாயை மூடுங்க....!இது என்ன பேச்சுன்னு பேசிக்கிட்டு இருக்கீங்க....?என்னைப் பார்க்கிற பார்வையை....இன்னொரு பெண்ணைப் பார்த்தும்...பார்த்து வைப்பீங்களா.....?",அவளையும் அறியாமல்....அவள் வெடுக்கென்று எரிந்து விழுந்தாள்.
"தெரியுதில்ல.....!எனக்கும் அப்படித்தான் இருக்கும்....!",முரட்டுத்தனமாக கூறினான் அவன்.
நொடியும் தாமதிக்காமல் அவனை நெருங்கியவள்....அவனை இழுத்து தன் வயிற்றோடு அணைத்துக் கொண்டாள்.
"ஸாரிங்க.....!இப்படியொரு நிலைமைல நான் யோசிச்சுப் பார்க்கவே இல்ல....!ரியலி வெரி வெரி ஸாரி....!உங்க உணர்வை என்னால புரிஞ்சுக்க முடியுது.....!இனி எந்த ஒரு முடிவையும் உங்ககிட்ட கேட்காம....நான் தனியா எடுக்க மாட்டேன்.....!",அவன் தலை முடிக்குள் தன் விரல்களை விட்டு அளைந்தவாறே அவள் மன்னிப்பு கேட்க....
அவள் வயிற்றில் தன் முகத்தை ஆழ புதைத்துக் கொண்டவனின் மனதில் இப்பொழுது கோபம் இல்லை.அவளுடைய அருகாமையும்....அவளுடைய மன்னிப்பும்....அவனது கோபத்தை குறைந்திருந்தது.
"இனி இப்படியொரு காரியத்தை செய்யாதே டி.....!உனக்குத் துணையா எப்பவும் நான் இருப்பேன்....!நீ தனியா போராட வேண்டிய அவசியமே இல்ல.....!எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லு.....நான் பார்த்துகிறேன்....!",காதலோடு அவன் கூற....அவனை மேலும் அணைத்துக் கொண்டாள் அவள்.
.............................................................
"பேபி.....!உன் விருப்பப்படியே பார்ட்டி அரேன்ஜ் பண்ணிட்டேன்.....!வெள்ளைக்கிழமை ஈவ்னிங் ராயல் பேலஸ்ல பார்ட்டி அண்ட் இந்த பார்ட்டியில 'ஆதித்யன் க்ரூப் ஆஃப் கம்பெனிஸ்...' எம்ப்ளாயிஸ் அத்தனை பேரும் கலந்துக்கலாம்.....!",உற்சாகமாய் ஆதித்யன் கூற...
"வாவ்.....!சூப்பர் ஆது....!",குதூகலித்தாள் நித்திலா.
"ஆது....!இந்த பார்ட்டி அரேன்ஞ்மெண்ட்ஸ் எல்லாம் நான் பார்த்துக்கிட்டா.......?எனக்கு இந்த மாதிரி பார்ட்டி ஆர்கனைஸ் பண்றதுக்கு ரொம்ப பிடிக்கும்.....!",ஆசையாக கேட்டவளை ஏறிட்டுப் பார்த்தவன்,
"வேண்டாம் பேபி.....!அந்த வேலையெல்லாம் உனக்கு எதுக்கு.....?நம்ம மேனேஜரை பார்த்துக்க சொல்லிட்டேன்.....!",அவன் மறுக்கவும்....அவள் மீண்டும் வற்புறுத்தினாள்.
"ப்ளீஸ் ஆது....!நான் பார்த்துகிறேன்....!",
"நோ பேபி.....!பார்ட்டி ஆர்கனைஸ் பண்ணறதுன்னா ஒண்ணும் சின்னக் காரியம் இல்ல.....!அதுக்கு இதுக்குன்னு நிறைய பக்கம் அலைய வேண்டி இருக்கும்.....!நீ எதுக்கு வீணா அலையணும்.....?வேண்டாம்.....!",உறுதியாக மறுத்து விட....அவளும் அதற்கு மேல் வாதாடாமல் அமைதியாகி விட்டாள்.
"அப்புறம் பேபி.....!இந்த வாரம் உங்க அம்மா வீட்டுக்குப் போக வேண்டாம்....!பார்ட்டி இருக்கல்ல.....?",அவன் கூறவும்....அவனைத் திரும்பிப் பார்த்து முறைத்தாள் நித்திலா.
பின்னே....!அவளும்தான் முறைக்காமல் என்ன செய்வாள்.....?ஊட்டியில் இருந்து வந்த வாரமே 'ஊருக்கு கிளம்புகிறேன்....!', என்றவளை....'வேண்டாம்....!இப்பத்தானே உன் காதலை சொன்ன....?இந்த வாரமே என்னை விட்டுட்டு ஊருக்கு கிளம்பறேன்னு சொல்ற....?',அது இது என்று கூறி அவளை ஊருக்குச் செல்ல விடாமல் தடுத்து விட்டான்.
அவனுக்கு அவன் கவலை.....!அவள் ஊருக்கு போனால்....இரண்டு நாட்கள் அவளை பார்க்காமல் இருக்க வேண்டுமே....என்ற எண்ணத்தில் அவளை ஊருக்கு அனுப்பவே மறுத்தான் அந்த காதல் பைத்தியக்காரன்....!
அப்படியும் முரண்டு பிடித்தவளை,"அடுத்த வாரம் லீவ் தர்றேன்.....!போய் பார்த்துட்டு வா....!",என்று கூறி அவள் வாயை அடைத்து விட்டான்.இந்த வாரமும் அவளைத் தடுக்க ஒரு காரணம் கிடைக்கவும்....இதுதான் சாக்கென்று அதைப் பிடித்துக் கொண்டு தொங்கினான்.
"நான் எங்க ஊருக்குப் போறதுக்கும்....பார்ட்டி நடக்கறதுக்கும் என்ன சம்பந்தம்.....?வெள்ளிக்கிழமை ஈவ்னிங் தானே பார்ட்டி......?நான் சனிக்கிழமை காலையில கிளம்பிக்கிறேன்.....!",அவனை முறைத்தபடி நித்திலா கூற...
"பார்ட்டி முடியறதுக்கே நைட் ரொம்ப நேரமாகிடும்.....!நீ ரொம்ப டயர்டாகிடுவ.....!ஸோ....இந்த வாரம் போக வேண்டாம்.....!அடுத்த வாரம் போ.....!",சப்பைக் கட்டு கட்டினான் அவன்.
"அது என் பிரச்சனை பாஸ்....!அதை நான் பார்த்துகிறேன்....!நீங்க ஒண்ணும் கவலைப்பட வேண்டாம்.....!",அவன் எப்படி பந்து வீசினாலும் சிக்ஸர் அடித்தாள் நம் நாயகி.
"பட்....லீவ் கொடுக்கறது என் பிரச்சனைதானே.....?இந்த வாரம் உனக்கு லீவ் கிடையாது......!",எப்படியாவது அவளை இங்கேயே இருக்க வைத்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் கூறினான் அவன்.
"என்ன விளையாடறீங்களா......?போன வாரம்தானே எனக்கு லீவ் தர்றேன்னு சொன்னீங்க.....?",
"அது.... போன வாரம் சொன்னது.....!இந்த வாரம் உனக்கு லீவ் கொடுக்க முடியாதுன்னு தோணுது.....!",
என்னவோ தெரியவில்லை.....!அவளை ஊருக்கு அனுப்புவதென்றால்....அவனுக்கு வேப்பங்காயாய் கசந்தது.
"இப்போ என்னதான் சொல்ல வர்றீங்க.....?",அவள் முடிவாய் கேட்க...
"நீ இந்த வாரம் ஊருக்கு போகக் கூடாது.....!",என்றான் அவன் உறுதியாக.
அவனையே சில நிமிடங்கள் இமைக்காது நோக்கியவள்....பிறகு....ஒன்றும் பேசாமல் திரும்பிக் கொண்டாள்.அவனும் தோளைக் குலுக்கிக் கொண்டு தன் வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தான்.
நேரம் சென்று கொண்டிருந்ததே தவிர....அவளாக அவனிடம் பேசவே இல்லை.அவன் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் பதில் கூறிக் கொண்டிருந்தாள்.அதுவும்....வேலை சம்பந்தமான கேள்விகளுக்கு மட்டும் பதிலளித்தாள்.ஆதித்யனால் அவளுடைய பாராமுகத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை.
மதியம் வரைக்கும் பொறுத்துப் பார்த்தவன்....அதற்கு மேல் முடியாமல்,"உனக்கு இப்ப என்னதான் டி வேணும்....?எதுக்கு இப்படி 'உம்'முன்னு இருக்க.....?",என்று கேட்டு விட்டான்.
அவள் அப்பொழுதும் அமைதியாக....தன் சிஸ்டமையே பார்த்துக் கொண்டிருக்கவும்,"சரி....!இப்போ என்ன.....?நீ உன் அம்மா வீட்டுக்குப் போகணும்....அவ்வளவுதானே....?போய்ட்டு வா....!சனிக்கிழமையும்....திங்கட்கிழமையும் லீவ் எடுத்துக்கோ.....!போய் ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு வா.....!",பல்லைக் கடித்தபடி கடுப்புடன் அவன் கூற...
"............",அவள் அப்பொழுதும் எதுவும் பேசவில்லை.
'அவன் வேறு யாரிடமோ பேசுகிறான்....!',என்பதைப் போல் அவனைக் கண்டு கொள்ளாமல் அமர்ந்திருந்தாள்.
"அதுதான் போயிட்டு வான்னு சொல்லிட்டேன் ல....?இன்னும் ஏன் இப்படியே உட்கார்ந்திருக்க....?பேசித் தொலை....!",எரிச்சல் குறையாமல் அவன் திட்ட..
"இப்படி சலிச்சுக்கிட்டு யாரும் என்னை போக சொல்ல வேண்டாம்....!நான் எங்கேயும் போகலை.....!இங்கேயே இருக்கிறேன்.....!",முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு அவள் கூறிய விதத்தில்....அவன் முகம் மென்மையாய் மாறியது.
'என் அனுமதிக்காகத்தான் இப்படி முகத்தை தூக்கி வைச்சுக்கிட்டு உட்கார்ந்திருக்கா....!நான் சிரிச்சுக்கிட்டே வழியனுப்பி வைச்சாதான் இவ ஊருக்கு போவாள்....!',அவளை சரியாய் புரிந்து கொண்டவனின் முகத்தில் காதல் புன்னகை அரும்பியது.
"பேபி....பேபி....!சிரிச்சிக்கிட்டேதான் சொல்றேன்.....!நீ போய்ட்டு வா....!திங்கட்கிழமை வரைக்கும் அங்கேயே இருந்து....உன் அம்மா அப்பாவை நல்ல கொஞ்சிட்டு வா....!பட்...ஒன் கண்டிஷன்.....!",என்றபடி அவள் முகத்தை ஏறிட..
"என்ன கண்டிஷன்.....?",கேள்வியாய் அவன் முகத்தை நோக்கினாள் அவள்.
"நான் உனக்கு போன் பண்ணும் போதெல்லம் நீ அட்டெண்ட் பண்ணனும்....!எந்தக் காரணமும் சொல்லி அவாய்ட் பண்ணக் கூடாது.....!",
"ப்பூ.....!அவ்வளவுதானா.....?நீங்க எப்போ போன் பண்ணினாலும் மறுக்காம பேசறேன்....போதுமா.....?உங்களுக்கு நான் ஊருக்கு போறதில சம்மதம்தானே.....?",ஆர்வத்துடன் அவன் முகம் பார்த்து வினவ..
"ம்ம்...போய்ட்டு வா....!என் கண்டிஷனை மறந்திடாதே....!",அவன் சிரித்தபடியே ஞாபகப்படுத்தவும்...
"ம்ஹீம்.....!மறக்க மாட்டேன்....!",என்று தலையாட்டியவளுக்கு அப்பொழுது தெரியவில்லை.....!இவனது கண்டிஷனை ஒத்துக் கொண்டதற்கு பதிலாக...தான் சென்னையிலேயே இருந்திருக்கலாம் என்று எண்ணும் அளவிற்கு....அவன்....அவளை இம்சைப்படுத்தப் போகிறான் என்று....!
அகம் தொட வருவான்....!!!
கருத்துகள்
கருத்துரையிடுக