எவனோ என் அகம் தொட்டு விட்டான் - அகம் 46

 அத்தியாயம் 46 :

 

ஒருவழியாக...பார்ட்டி நடக்கும் நாளும் அழகாக விடிந்தது.அன்று....'ஆதித்யன் க்ரூப் ஆப் கம்பெனீஸின்' வேலையாட்கள் அனைவருக்கும் அரைநாள் மட்டுமே அலுவலகம்.மதியத்திற்கு மேல் அனைவரும் வீட்டிற்குச் சென்று விட்டு....மாலை நேராக பார்ட்டி நடக்கும் ஹோட்டலுக்கு வந்து விடுமாறு கூறப்பட்டிருந்தது.

 

மதியமானதும்....நித்திலாவை அவளது ஹாஸ்ட்டலின் முன் இறக்கி விட்ட ஆதித்யன்,"பேபி....!நீ ஈவ்னிங் ரெடியாகிட்டு வெயிட் பண்ணு.....!நான் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்.....!",அவன் கூறியதுதான் தாமதம்....இவள் அவசர அவசரமாக மறுத்தாள்.

 

"இல்ல....!வேண்டாம்....!யாராவது பார்த்தால் தப்பா நினைப்பாங்க.....!நானே வந்திடறேன்.....!",

 

பொறுமையற்ற பெருமூச்சுடன் அவளைப் பார்த்தவன்,"கமான் நித்திலா.....!யாரவது பார்த்தாதான் என்ன.....?ஈவ்னிங் வர்றேன்.....!ரெடியா இரு......!",என்றவன் அதற்கு மேல் தமாதியாமல் காரைக் கிளப்பி சென்று விட்டான்.

 

'ஹ்ம்ம்....!எதையும் மறுக்க முடியாது....!பிடிச்சா...முரட்டு பிடிதான்....!',செல்லமாக ஆதித்யனை திட்டியபடியே உள்ளே நுழைத்தாள் நித்திலா.

 

அன்று மாலை.....

 

ஆங்காங்கு வெள்ளை நிற கற்களும்....முத்துக்களும் பதிக்கப்பட்ட மிக அழகிய வெள்ளை நிற பேன்சி புடவையில்.....தேவதையை விட அழகாக ஜொலித்துக் கொண்டிருந்தாள் நித்திலா.அந்தப் புடவைக்குத் தோதாக வடிவமைக்கப்பட்டிருந்த அழகிய முத்துமாலை ஒன்று அவள் கழுத்தை அலங்கரித்திருந்தது.சிறிதாக ஒற்றை முத்து தொங்கும் காதணியை காதில் அணிந்தவள்....அதே போல் முத்துக்கள் பதித்த வளையல்களை தன் இரு கைகளிலும் அணிந்து கொண்டாள்.

 

இடுப்பு வரை நீண்டிருந்த கருங் கூந்தலை கர்லிங் செய்து அதன் உயரத்தைக் குறைத்தவள்....வகிடு எடுக்காமல் மேலே மட்டும் தலை வாரி.....மீதிக் கூந்தலை முன் பக்கமாக தோளில் வழியுமாறு தொங்க விட்டாள்.

 

இயற்கையாய் வளைந்திருந்த புருவங்களுக்கு மத்தியில்....சிறு வெள்ளைக் கல் பொட்டை ஒட்ட வைத்தவள்....திருப்தியாய் தன்னைப் பார்த்துக் கண்ணாடியில் புன்னகைத்துக் கொண்டாள்.

 

'ம்....நாம ரெடி.....!ஆது வந்தால் கிளம்ப வேண்டியதுதான்.....!',அவள் மனதிற்குள் கூறி முடிக்கவும்....அவளது மொபைல் அடிக்கவும் சரியாய் இருந்தது.ஆதித்யன்தான் கீழே வருமாறு அழைத்திருந்தான்.வர்ஷினியிடம் சொல்லிக் கொண்டு கீழே இறங்கியவள்....அங்கு வாசலில்....காரின் மேல் சாய்ந்தபடி நின்றிருந்த ஆதித்யனைப் பார்த்து இமைக்கவும் மறந்தாள்.

 

பாலாடை நிறத்திலான கோட் சூட்டில்....முன்னுச்சி முடி கலைய....வசீகரமான புன்னகையுடன்....இரு கைகளையும் கட்டிக் கொண்டு....ஒற்றைக் காலை மடித்து காரின் மேல் சாய்ந்தபடி நின்றிருந்தவனைப் பார்த்தவளுக்கு ஆசை ஆசையாய் வந்தது.

 

அப்படியே ஓடிச் சென்று அவனது கலைந்த தலைமுடியை இன்னும் அதிகமாக கலைத்து விட்டு....அவன் கூர்மையான மூக்கைப் பிடித்துத் தன் உயரத்திற்கு இழுத்து....இழுத்த வேகத்தில் அவன் நெற்றியில் இதழ் பதிக்க வேண்டும் என்பது போல் தாபம் எழுந்தது.

 

அவனைப் பார்த்து அவள் இமைக்க மறந்தாள் என்றால்.....வெள்ளை நிற தேவதையாய் தன் முன்னால் நின்றிருந்தவளைப் பார்த்து....அவன்....மூச்சு விடவும் மறந்தான்.அதிலும்....அவள் பார்த்த அந்த ஆளை விழுங்கும் பார்வை....அவனை கிறங்கடிக்கச் செய்தது.

 

"என்ன டி.....?அப்படியே கடிச்சு திங்கற மாதிரி பார்க்கிற......?",தன் முன்னால் நின்றிருந்தவளைப் பார்வையால் அள்ளிப் பருகியபடி அவன் கேட்க..

 

"ம்....!கடிச்சு திங்கணும் போலத்தான் இருக்கு.....!",அவனைப் பார்வையால் விழுங்கியபடியே கூறினாள் அவள்.இதுநாள் வரை....அவள்....அவனை இப்படியொரு பார்வை பார்த்ததில்லை.அவன்தான்....அவளை கண்டபடி மேய்வான்....!இன்று....அந்தப் பார்வையை அவள் பார்த்து வைத்ததில்....அவன்....மது அருந்திய வண்டானான்....!அதிலும்....அவள் பேசிய பேச்சு அவனை கிறங்கடிக்கச் செய்ய,

 

"ஏய்ய்.....!",என்றபடி அவளை நெருங்கியிருந்தான்.பிறகு....தாங்கள் இருக்கும் இடத்தை உணர்ந்தவனாய்....சிறு பெரு மூச்சுடன் காரில் ஏறி அமர்ந்தான்.

 

மெலிதான புன்னகையுடன் அவனுக்கு அருகில் முன்பக்கமாய் ஏறி அமர்ந்தவள்....அப்பொழுதும் அவனைப் பார்த்து....அதே பார்வையை வீசி வைக்க...அவன்....காரை கிளப்ப மறந்தவனாய்...அவள் பக்கம் நகர்ந்து அமர்ந்தான்.

 

"கொல்றேடி.....!",அவன் முணுமுணுக்க..

 

"நீதான் டா மயக்கற.....!வசீகரா......!அழகான ராட்சஸா.....!",,அவள் குரலில் அப்படியொரு மயக்கம்.

 

"ஏய்....!இப்படியெல்லாம் பேசாதே டி.....!அப்புறம்....ஐ லூஸ் மை கண்ட்ரோல்......!",வேக மூச்சுகளை எடுத்து விட்டபடி ஒரு மாதிரிக் குரலில் அவன் கூறவும்தான்....அவனை மிகவும் தூண்டி விட்டு விட்டோம் என்பதே அவளுக்கு உரைத்தது.

 

சட்டென்று அவனை விட்டு விலகி அமர்ந்தவள்,"ஹலோ பாஸ்.....!முதல்ல வண்டியை எடுங்க.....!நாம இன்னும் ஹாஸ்டல் வாசலிலேயேதான் நிற்கிறோம்.....!போற வர்றவங்க எல்லாம் நம்மளைத்தான் ஒரு மாதிரி பார்த்துட்டு போறாங்க....!",அவள் கேலியாய் கூறவும்....தன்னை சுதாரித்துக் கொண்டவன்.....மெலிதாக விசிலடித்தபடி காரைக் கிளப்பினான்.

 

கைகள் அதன் பாட்டிற்கு காரை ஓட்டினாலும்...அவன் உதடுகள் ஒரு பாடலை விசிலடித்துக் கொண்டே வந்தன....!கூடவே....அவனது விஷமக் கண்கள் அவளை ஒரு மார்க்கமாய் வேறு பார்த்து வைத்தன.....!

 

'என்ன பாட்டு பாடறான்.....?',நித்திலாவின் கவனம் முழுவதும்.....அவன் விசிலடிக்கும் பாடலின் மேல்தான் இருந்தது.என்னதான் யோசித்துப் பார்த்தும்....அவளால் அந்தப் பாடலைக் கண்டுபிடிக்க முடியாமல் போகவும்,

 

"என்ன பாட்டு பாடறீங்க....?",என்று அவனிடமே கேட்டு விட்டாள்.

 

அப்பொழுதும் அவளை ஒரு மாதிரியாகப் பார்த்து வைத்தவன்....சிறு சிரிப்போடு....அதே பாடல் வரிகளை சீழ்க்கை ஒலியால் முணுமுணுக்க....

 

"ம்ப்ச்.....!என்ன பாட்டுன்னு சொல்லுங்க.....!",மெல்ல சிணுங்கினாள் அவள்.

 

"பாடிக் காட்டட்டுமா.....?",அவன் கண்ணடிக்க,

 

"ம்....!பாடுங்க.....!பாடுங்க.....!",அந்தக் கள்வனின் கள்ளத்தனத்தை அறியாதவளாய்....ஆசை ஆசையாய் தலையாட்டினாள் அந்தப் பாவை.

 

வசீகரப் புன்னகையுடன் அந்த வசீகரனும் பாட ஆரம்பித்தான்.

 

"இருளைப் பின்னிய குழலோ....?

இரு விழிகள் நிலவின் நிழலோ....?

பொன் உதடுகள் சிறு வரியில்

என் உயிரைப் புதைப்பாளோ.....?",

 

என்று பாடியவனின் விழிகள்....அவளது இதழ்களையே வண்டாய் மாறி மொய்த்தது.அவனது பார்வையில்....அவள் தனது கீழுதட்டை அழுந்தக் கடித்துக் கொண்டாள்.

 

அவன் மேலும் பாட ஆரம்பித்தான்.

 

"ரவிவர்மன் தூரிகை எழுத்தோ....?இல்லை....

சங்கில் ஊறிய கழுத்தோ.....?

அதில் ஒற்றை வியர்வைத் துளியாய்

 நான் உருண்டிட மாட்டேனோ....?",

 

காருக்குள் நிலவிய அந்த ஏ.சி குளிரையும் தாண்டி அவள் முகத்தில் முத்து முத்தாய் வியர்வைத் துளிகள் அரும்பியிருந்தன...!அதிலும்....அவள் நெற்றியில் உதித்த ஒற்றை வியர்வைத் துளி ஒன்று....கடகடவென்று ஓடி வந்து....அவளது கழுத்துச் சரிவில் உருண்டோடி மறைய....அவனது பார்வையும் அந்த வியர்வைத் துளியில் பின்னாலேயே பயணித்தது.அவனது பார்வையின் வேகத்தைத் தாங்காமல்...அவளது இதழ்கள்....அவளது பற்களுக்கு இடையில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருந்தது....!

 

"பூமி கொண்ட பூவையெல்லாம்

இரு பந்தாய் செய்தது யார் செயலோ....?

சின்ன ஓவியச் சிற்றிடையோ....

அவள் சேலை கட்டிய சிறு புயலோ....?",

 

இப்பொழுது....அவன் பார்வை....சிறிதும் வெட்கமில்லாமல்...அவன் பாடிய பாடல் வரிகள் உணர்த்திய இடங்களை மேய....அவள் தாள மாட்டாதவளாய்,"போ....போதும்.....!",என்று முணுமுணுத்தாள்.

 

"ஏன்.....?",அவன்தான் வெட்கங் கெட்டுப் போய்....அவளைப் பார்வையால்  மேய்ந்தபடி....சிறிதும் கூச்சமில்லாமல் 'ஏன்....?' என்ற கேள்வியைக் கேட்டு வைக்கிறான் என்றால்....பாவையவளாலும் வெட்கங் கெட்டுப் போய் 'ஏன்....?' என்ற கேள்விக்கான காரணத்தை கூற முடியுமா.....?அவள் மௌனம் சாதித்தாள்.

 

"அடுத்த வரி பாடறேன்.....கேளு.....!",என்றவன்,

 

"என் பெண்பாவை கொண்ட பொன்கால்கள்....அவை....

மன்மதன் தோட்டத்து மரகதத் தூண்கள்....!",

 

அவன் பாடிக் கொண்டே போக,"ஹைய்யோ.....!போதும்....!உங்க பாட்டை நிறுத்தறீங்களா....?",அவள் முகம் செம்பருத்தி பூவாய் சிவந்திருந்தது.முகம் சிவக்க....தடுமாற்றத்துடன் அமர்ந்திருந்தவளைப் பார்த்தவனின் இதழ்களில் ரசனையான புன்னகை ஒன்று வந்தமர்ந்தது....!

 

"எப்படி.....?என்னுடைய பாட்டு....?",அவன் புருவம் உயர்த்த..

 

"பாட்டை மட்டுமா டா நீ பாடின.....?ரௌடி.....!காதல் ரௌடி.....!அங்கே இங்கேன்னு அலைபாயற இந்தக் கண்ணை அப்படியே நோண்டனும்....!",செல்லமாக அவள்....அவனைத் திட்ட...

 

"ஹா...ஹா....!என் கண்ணு என்ன பேபி பண்ணுது.....?அது பாட்டுக்கு....அதுக்குப் பிடிச்சதை பார்க்குது....!"உல்லாசமாய் அவன் கூற...

 

"ச்சீய்....!பொறுக்கி....!வாயை மூடு டா....!",விளையாட்டாய் அவன் காதைப் பிடித்துத் திருகினாள் அவள்.இப்படியாக....சீண்டலுமாய்....மோகமுமாய் அவர்கள் பார்ட்டி நடக்கும் ஹாலிற்கு வந்து சேர்ந்தனர்.இவர்கள் சற்று நேரமே வந்திருந்ததால்....அவ்வளவாக யாரும் வந்திருக்கவில்லை.இவர்கள் இருவரும் ஒரே காரில் வந்து இறங்கியதை...அங்கிருந்த சில நபர்கள் கவனித்தாலும்....M.D - செக்ரெட்டரி என்ற எண்ணத்தில்தான் ஆதித்யனையும் நித்திலாவையும் கவனித்தனர்.

 

நேரமாக ஆக....எம்ப்ளாயிஸ் அனைவரும் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர்.அந்தப் பெரிய ஹாலை...வெள்ளையும் இள ரோஜா வண்ண பலூன்களும்....திரைச்சீலைகளும் அலங்கரித்திருக்க....ஆங்காங்கு அனைவரும் குழுவாக நின்று பேசிக் கொண்டிருந்தனர்.

 

நேர்த்தியாக சீருடை அணிந்திருந்த சர்வர்கள்....கையில் பழச்சாறும்....உயர் ரக மது வகைகளும் அடங்கிய தட்டை ஏந்திக் கொண்டு....வந்திருப்பவர்களின் விருப்பத்திற்கு தகுந்தவாறு வழங்கிக் கொண்டிருந்தனர்.மெல்லிய சிரிப்பொலிகளும்...மனதை மயக்கும் மென்மையான இசையும் அந்த ஹாலை நிறைத்திருந்தன.

 

நித்திலாவும் சுமித்ராவுடன் நின்றபடி....தங்களுடன் வேலை செய்யும் சக தோழிகளுடன் பேசிக் கொண்டிருந்தாள்.ஆதித்யன்....அவனுக்கான நண்பர்களின் வட்டாரத்தோடு ஐக்கியமாகியிருந்தான்.தங்க நிறத்திலான ஷிபான் சில்க்கில்....தங்கத் தாமரையாய் ஜொலித்துக் கொண்டிருந்த சுமித்ராவை....ஆதித்யன் அருகில் தங்களது நண்பர்களுடன் நின்றிருந்த கௌதமின் விழிகள் அவ்வப்போது ரசனையுடன் வருடிக் கொண்டிருந்தன....!சுமித்ராவின் விழிகளும்...தன்னவனின் பார்வைக் கணைகளை சந்தித்து...அவ்வப்போது அதை நாணத்துடன் திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தாள்....!

 

"ஹலோ லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன்.....!",துறுதுறுப்பான ஒரு இளைஞனின் கலகலப்பான பேச்சில் அனைவரும் தங்களது பேச்சை நிறுத்தி ஆர்வத்துடன் அவனை நோக்கினர்.

 

"பார்ட்டின்னு இருந்தால் டான்ஸ்...மியூசிக் இருக்க வேண்டாமா....?அப்போத்தானே இடம் களைகட்டும்....!கமான் கேர்ள்ஸ் அண்ட் பாய்ஸ்....!திஸ் ஃப்ளோர் இஸ் யுவர்ஸ்....!கமான்....!உங்க அழகான நடனத் திறமைகளை காட்டுங்க.....!",அவன் கூறி முடிக்கவும்....ஆரவாரமான கரகோஷம் ஒன்று எழுந்து அடங்கியது.

 

"பூக்களே சற்று ஓய்வெடுங்கள்....!

அவள் வந்து விட்டாள்....!",

 

பிண்ணனியில் இரைச்சலில்லாத மென்மையான பாடல் ஒலிக்க....பெண்கள் குழு ஒன்று ஆர்வத்துடன் முன்னால் வந்து....அட்டகாசமாய் நடனமாட ஆரம்பித்தனர்.அந்த மெல்லிய இசைக்குத் தகுந்தவாறு....அந்தப் பெண்கள் ஆடிய நடனம் அங்கிருந்த அனைவரையும் ரசிக்க வைத்தது.

 

அவர்கள் நடனமாடிக் கொண்டிருக்கும் போது...நித்திலா....ஓரக் கண்ணால் ஆதித்யனைப் பார்க்க....அவளது பார்வையை விடாமல் தாங்கிப் பிடித்தவன்....ஒற்றை புருவத்தை மட்டும் 'என்ன....?' என்பது போல் உயர்த்தி....உதட்டைக் குவித்து ஒரு முத்தத்தை அவளை நோக்கி பறக்க விட....அவனது செய்கையில் விதிர்த்துப் போனவள்....'யாரேனும் பார்த்து விட்டார்களா...?',என்று அவசர அவசரமாக சுற்றும் முற்றும் பார்க்க....அனைவரும் அந்தப் பெண்களின் நடனத்தில் மூழ்கியிருந்தனர்.

 

"ஹப்பாடா......!",என்று நிம்மதி பெருமூச்சு விட்டபடி...போலியான கண்டிப்புடன் அவள்....அவனைப் பார்க்க....அந்த மாயக் கண்ணனோ...தன் நண்பர்களுடன் எதையோ சிரித்துப் பேசிக் கொண்டே....இவளைப் பார்த்து வசீகரமாய் கண்ணடித்து வைத்தான்.

 

'ஹைய்யோ.....!',என்ற பதட்டத்துடன் மீண்டும் சுற்றும் முற்றும் தன் பார்வையை சுழல விட்டாள் நித்திலா.

 

'யாரும் பார்க்கலை.....!',என்றபடி ஆதித்யன் அவளைப் பார்த்து உதட்டசைக்க,'ராட்சஸா....!அழகிய ராட்சஸா.....!',என்று முணுமுணுத்தவள்....தன் அருகில் நின்றிருந்த தோழி எதையோ கேட்கவும்....அவனைப் பார்த்து உதட்டை சுழித்தபடி திரும்பிக் கொண்டாள்.

 

அவளது உதட்டு சுழிப்பில் சிக்கி சிதறிக் கொண்டிருந்த மனதை....ஒருவழியாக மீட்டு...நடனத்தில் பார்வையை பதித்தான் ஆதித்யன்.அந்தப் பாடல் முடிந்து....அடுத்த பாடல் ஒலிபரப்பாகியது.

 

"லைஃப்புல ஃவைப் வந்துட்டா

டைட்டாதான் இருக்கணும்.....!

வெயிட்டான பொண்ணை பார்த்தாலும்

ரைட்டாத்தான் நடக்கணும்....!",

 

இந்தப் பாடலுக்கு...கல்யாணமான கணவன்மார்கள் குழு ஒன்று ஆர்வத்துடன் முன்னே வந்து நடனமாடி....தங்களது மனைவிமார்களின் ஆசைப் பார்வையை வாங்கிக் கட்டிக் கொண்டது.

 

பேரர் ஒருவர்...மது வகைகள் அடங்கிய தட்டை...ஆதித்யனின் நண்பர்கள் வட்டாரத்தில் வந்து நீட்ட....ஆசையுடன் அதை எடுக்கப் போன ஆதித்யனின் விழிகள் ஒரு கணம் தயங்கி நித்திலாவை நோக்கியது.அவளும் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

'வேண்டாம்....!',அவள் தலையசைக்க...அவன் முகம் காற்று போன பலூனாய் கூம்பிப் போனது.அவனது நண்பர்கள் அனைவரும் ஆளுக்கொரு கிளாஸை கையில் எடுத்துக் கொண்டு..."உனக்கு வேண்டாமா....?",என்றபடி ஆதித்யனைப் பார்க்க....அவனோ...."ம்....வேண்டாம்....!ஆமாம்....!",என்று தடுமாறிக் கொண்டிருந்தான்.அவனது பார்வை நித்திலாவிடம்தான் இருந்தது.

 

அவள் என்ன நினைத்தாளோ....தெரியவில்லை....!அவள் தன் கண்ணசைவிலேயே,'எடுத்துகோங்க....!பட்....லிமிட் தான்.....!',என்று கூற...அவன் முகம் மலர்ந்து ஒரு கிளாஸை எடுத்துக் கொண்டான்.

 

இவர்கள் நடத்தும் நாடகத்தை சுமித்ரா....ஒரு கள்ளச் சிரிப்புடன் கவனித்துக் கொண்டுதான் இருந்தாள்.அவர்கள் இருவரும் காதலிக்கும் விஷயத்தை....கெளதம் அவளிடம் கூறியிருந்தாள்.அன்றே...."ஏன் டி என்கிட்ட சொல்லல....?",என்று சண்டைக்கு வந்த சுமித்ராவை....பல காரணங்கள் கூறி....சில பல 'சாரி...' கேட்டு அவளை அமைதியாகியிருந்தாள் நித்திலா.

 

இவர்களது விளையாட்டில்....சுமித்ராவின் பார்வை தன்னிச்சையாய் உயர்ந்து தன்னவனை நோக்க....அவள் பார்வையை கண்டு கொண்டவனின் முகம் காதலால் மலர்ந்தது.

 

'உங்களுக்கு வேண்டாமா....?',சுமித்ரா மது வகைகளை சுட்டிக் காட்டி வினவ..

 

ஒரு கணம் அவளையே இமைக்காது பார்த்தவன்...'எனக்கு இந்த மது வேண்டாம்....!வேற ஒண்ணுதான் வேணும்....!',என்றவனின் பார்வை அவளது சிவந்த இதழ்களில் நிலைத்து....பிறகு....தன் ஆள்காட்டி விரலால் தனது உதடுகளைத் தொட்டுக் காண்பிக்க..

 

இப்பொழுது,'அடியாத்தி....!',என்ற பதட்டத்துடன் சுற்றும் முற்றும் பார்ப்பது சுமித்ராவின் முறையாயிற்று.

 

'இங்கே வா....!',கெளதம் உதட்டசைவில் அவளை அழைக்க...

 

'ம்ஹீம்....!',தலையை ஆட்டி மறுத்தாள் அவள்.

 

'வா டி....!',அவன் மீண்டும் பிடிவாதமாய் அழைக்க..

 

'ம்ஹீம்....!',இப்பொழுது அவளது தலையாட்டலின் வேகம் குறைந்திருந்தது.

 

'ப்ச்...!வாடின்னா.....!' இம்முறை அவனது முகம் சற்று கோபத்தைக் காட்டியது.

 

'எல்லாரும் இருக்காங்க....!',அவள் சுற்றும் முற்றும் பார்க்க..

 

'அப்ப....வெளியில இருக்கிற கார்டனுக்கு வா.....!',அவன் கண்ணசைவிலேயே கட்டளையிட்டு விட்டு வெளியேறினான்.

 

'இப்போத்தான் நம்ம மேல இருக்கிற கோபம் குறைஞ்சிருக்கு....!போகலைன்னா....மறுபடியும் மூக்குக்கு மேல கோபம் வந்திடும்.....!',மனதிற்குள் எண்ணியவள்...நித்திலாவிடம் 'ரெஸ்ட் ரூம்...' என்று கூறிவிட்டு வெளியேறினாள்.

 

பசுமைப் புல்வெளி போர்த்தியிருந்த தோட்டத்தில் யாரும் இல்லை.சுற்றும் முற்றும் பார்த்தபடி வந்து கொண்டிருந்த சுமித்ராவின் பின்னால் பூனை போல் பதுங்கி பதுங்கி வந்தவன்....பின்னாலிருந்தபடியே தன் இரு கைகளாலும் அவள் இடையைப் பற்றி உயரத் தூக்க..

 

"ஹைய்யோ....!",கால் கொலுசு சப்தமிட மெலிதாக கூச்சலிட்டாள் அவள்.அவளுக்குத் தெரியும்....அவன் தான் என்று....!

 

"என்ன இது....?கீழே இறக்கி விடுங்க.....!யாராவது பார்த்திட போறாங்க....!",கால்களை ஆட்டியபடி மறுத்தவளை அலேக்காக தூக்கிச் சென்றவன்....இருளின் நிழல் படிந்திருந்த ஒரு மரமல்லி மரத்தின் கீழ் சென்றுதான் இறக்கி விட்டான்.

 

"இப்படியா பண்ணுவீங்க.....?",அவன் தன்னை தூக்கியதால் இடைப்பகுதியில் நெகிழ்ந்திருந்த புடவையை சரி செய்தபடியே அவள் சிணுங்க...

 

புடவையை சரி செய்ய விடாமல் அவளைத் தடுத்தவன்....அவளது வெற்று இடையில் தன் கரங்களை அழுத்தமாகப் பதித்து....அவளைத் தன்னை நோக்கி இழுத்தான்.

 

அவள் கழுத்தில் முகம் புதைத்து...அவளை வாசம் பிடித்தவன்,"ம்ஹா....!எவ்வளவு நாள் ஆச்சு டி....!இந்த கொஞ்ச நாளா கோபம்...பிரச்சனை....டென்க்ஷன்னே ஓடிடுச்சு....!",கழுத்தில் முகம் புதைத்தபடியே அவன் பேச....

 

நீண்ட நாட்களுக்குப் பிறகு கிடைத்த அவனுடைய நெருக்கத்தில் தன்னை மறந்தாள் அவள்.

 

"இந்தப் புடவையில ரொம்ப அழகா இருக்க டி ராட்சசி....!",என்றவனின் கரங்கள்...அவளது வெற்று இடையில் ஊர்ந்தன.

 

"ஊஹீம்.....!",என்றபடி புடவையை இழுத்து இடையை மறைக்க முயன்றாள் அவள்.

 

"ப்ச்....!",சலித்தபடி அவள் கையைத் தட்டி விட்டவன்,"ஹனி....!எனக்கு இப்பவே ஹனி வேணும்.....!",அவனது வார்த்தைகள் பிதற்றலுடன் வெளி வந்தன.அவனது உதடுகளோ....அவளது இதழ்களை நோக்கி ஊர்ந்தன.

 

"யாராவது பார்த்திட போறாங்க.....!",அவள் வாய் அப்படிக் கூறினாலும்....அவளது கைகள் அவனது கழுத்தைச் சுற்றி வளைத்தன.

 

"இங்கே யாரு டி வர போறாங்க.....?",என்றவனின் உதடுகள்....அவளது தேன் சுரக்கும் இதழ்களை கவ்விக் கொள்ளும் நேரம்..

 

"அதோ....நம்ம கெளதம் அங்கே இருக்கான் பாருங்க.....!",என்ற ஆதித்யனின் குரலில் அவன்....அடித்துப் பிடித்துக் கொண்டு சுமித்ராவிடம் இருந்து விலகினான்.'என்ன செய்வது....?',என்று தெரியாமல் சுமித்ராவும் அவசர அவசரமாக விலகி நின்று கொண்டாள்.

 

அங்கிருந்து பார்த்தவர்களுக்கு கௌதமின் முதுகு மட்டும்தான் தெரிந்தது.சுமித்ரா நின்றிருந்ததை அவர்கள் கவனிக்கவில்லை.அருகில் நெருங்கவும்தான் அங்கு....சுமித்ரா இருப்பது தெரிந்தது....ஆதித்யனின் நண்பர்கள் பட்டாளத்திற்கு....!

 

'ஆஹா....!தப்பான நேரத்துல வந்துட்டோம் போலவே.....?',ஆதித்யன் எண்ணமிட்டுக் கொண்டிருக்கும் போதே....கெளதம் அவனைப் பார்த்து கொலைப்பார்வை ஒன்றை வீசி வைத்தான்.அதைப் பார்த்த ஆதித்யனுக்கு சிரிப்புதான் வந்தது.

 

அதற்குள் அவர்களை நெருங்கியிருந்த அந்த நண்பர்கள் பட்டாளம்,"டேய் மச்சான்.....!இங்கே என்னடா பண்ணற....?இந்தப் பொண்ணு யாரு....?",என்று கேள்வி கேட்கத் தொடங்க..

 

'மவனே....!உன்னை அப்புறம் வைச்சுக்கிறேன் டா....!',ஆதித்யனைப் பார்த்துக் கறுவியவன்....நண்பர்களைப் பார்த்து,"இவள்தான் நான் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு டா....!சுமித்ரா.....!",என்று நண்பர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தவன்....சுமித்ராவிடமும் அனைவரையும் அறிமுகப்படுத்தினான்.

 

"ஓ...ஹோ....!",ஆர்பாட்டமாய் கூச்சலிட்ட நண்பர்கள் பட்டாளம்,"சிஸ்டர் கூட ரொமான்ஸ் பண்ணும் போது கரடிகள் மாதிரி வந்து கெடுத்திட்டோமா....?",கௌதமை கலாய்த்தவர்கள்....இருவருக்கும் வாழ்த்து கூறவும் மறக்கவில்லை.ஒரு வெட்கப் புன்னகையுடன் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தாள் சுமித்ரா.

 

"இதுக்குத்தான் மச்சான்....பெரியவங்க சொல்லி வைச்சிருக்காங்க....!தன் வினை தன்னைச் சுடும்ன்னு....",அன்று நித்திலாவுடன் இருந்த போது பூஜை வேளைக் கரடியாக வந்து தொல்லை செய்ததை நினைவு கூர்ந்தபடி ஆதித்யன்....கௌதமின் காதோரம் கிசுகிசுக்க..

 

"கிராதகா....!நீயெல்லாம் நல்லாயிருப்பியா டா....!",பல்லைக் கடித்தான் கெளதம்.

 

அதற்குள் அவன் நண்பர்கள்,"சரிப்பா....!கல்யாணம் பண்ணிக்கப் போறவங்களை நாம டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்....!வாங்க....!நாம உள்ளே போகலாம்...!",என்றபடி நகர....கௌதமின் முகம் மலர்ந்தது.

 

அதைக் கண்ட ஆதித்யன்,"அட....!இருங்கப்பா....!இவங்க என்ன பேச போறாங்க....?அதுதான் தினமும் ஆபிஸ்ல மீட் பண்ணிக்கறாங்களே....!நாம கௌதமையும் உள்ளே கூட்டிட்டு போவோம்....!இன்னைக்குத்தான் நாம எல்லாம் ஒண்ணா இருக்கறதுக்கு சான்ஸ் கிடைச்சிருக்கு....!",வேண்டுமென்றே அவர்களைத் தடுத்து நிறுத்தியவன்,

 

சுமித்ராவிடம் திரும்பி,"ஸாரிம்மா....!உனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லையே....?இன்னைக்கு ஒருநாள் உன் கௌதமை எங்ககிட்ட வாடகைக்கு விட்டு விடு....!",என்று கூற...

 

"அய்யோ....சார்....!எனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்ல....!நீங்க தாராளமா கூட்டிட்டு போங்க....!",புன்னகையுடன் கூறினாள் சுமித்ரா.

 

கௌதமின் விழிகளோ...'இருடி....!உனக்கு இருக்கு கச்சேரி....!' என்று ரகசியமாய் மிரட்டியது.

 

இதைக் கேட்டுக் கொண்டிருந்த நண்பர்கள் பட்டாளமும்,"ஆதி சொல்றதும் சரிதான்....!அதுதான் சிஸ்டரே சொல்லிட்டாங்களே...?அப்புறம் என்ன....கெளதம்....!நீயும் வாடா.....!",என்றழைக்க..

 

கௌதமோ....'வெட்டவா...இல்லை....குத்தவா....?',என்பது போல் ஆதித்யனைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

அவனது பார்வையைக் கண்டும் காணாமல் விட்ட ஆதித்யன்...சுமித்ராவிடம்,"இன்னும் என்னம்மா 'சார்'ன்னு கூப்பிட்டுட்டு இருக்க....?'அண்ணா'ன்னு கூப்பிடு.....!உங்க கல்யாணத்துல....உனக்கு அண்ணனா இருந்து நான்தான் எல்லா கடமையையும் செய்யப் போறேன்....!",அன்று கௌதமிடம் கூறியதையே....இன்று....சுமித்ராவிடமும் கூற...அவள் முகம் பூவாய் மலர்ந்தது.

 

தன் பிறந்த வீட்டு உறவுகளே....தன் உணர்வுகளை மதிக்காத நிலையில்...ஆதித்யன் இவ்வாறு கூறவும்....அவளுக்கு கண்கள் கலங்கியது.

 

"ரொம்ப தேங்க்ஸ் அண்ணா.....!",என்றாள் முகம் முழுக்க புன்னகையோடு.

 

அதன் பிறகு சிறிது நேரம் பேசி விட்டு....கையோடு கௌதமையும் அழைத்துக் கொண்டுதான் அனைவரும் அங்கிருந்து அகன்றனர்.

 

"மவனே....!உனக்கு கல்யாணமான அன்னைக்கே பர்ஸ்ட் நைட் நடக்காது டா....!இதுதான் என்னுடைய சாபம்....!",கெளதம்....ஆதித்யனின் காதைக் கடிக்க...

 

"பரவாயில்லை டா மச்சான்....!பர்ஸ்ட் நைட் இல்லைன்னா என்ன....?பர்ஸ்ட் பகல் கொண்டாடிக்கிறேன்....!",கண்ணைச் சிமிட்டிய ஆதித்யனைக் கண்டு,,,கௌதம்தான் பாவம்....கொலை வெறியாகிப் போனான்.

 

"ஒகே....லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன்...!இப்போதான் பார்ட்டி களைகட்ட ஆரம்பிக்குது....!இது வரைக்கும் எல்லோரும் சிங்கிளா டான்ஸ் பண்ணியாச்சு....!இனி ஜோடி டான்ஸை பார்ப்போம்.....!கமான் கைஸ்....!விருப்பமுள்ள ஜோடிகள் வந்து டான்ஸ் பண்ணலாம்....!கமான்...கமான்...!",அந்த இளைஞன் உற்சாகத்துடன் குரல் எழுப்ப...அனைவரும் மகிழ்ச்சியாய் ஆர்ப்பரித்தனர்.

 

"வாவ்....!சூப்பர்....!",குழந்தையின் குதூகலத்தோடு ஆர்ப்பரித்த நித்திலாவை ஆதித்யன் விழிகள் ரசனையுடன் அளவிட்டது.அவன் விழிகள் மட்டுமா அவளை ரசித்தன....?அவள் அந்த பார்ட்டி ஹாலில் நுழைந்ததில் இருந்து....அவளுடைய ஒவ்வொரு செய்கையையும்....இன்னொரு ஜோடி விழிகள் காதலுடன் ரசித்துக் கொண்டிருந்தன.

 

அவளது ஒவ்வொரு அசைவையும் ரசித்தாலும்....அவள்...ஆதித்யனுடன் நடத்திய ரகசிய உரையாடலை கவனிக்காமல் விட்ட....அந்த விழிகளின் துரதிருஷ்டத்தை என்னவென்று சொல்வது....?காதலின் விளையாட்டு என்றா....?இல்லை...விதியின் சாபம் என்றா....?

 

அந்த விழிகளுக்கு சொந்தக்காரன் யாராய் இருக்க முடியும்....?நித்திலாவை ஒருதலையாய் காதலித்துக் கொண்டிருக்கும் பாலாவைத் தவிர....!

 

"கமான் பிரெண்ட்ஸ்.....!ரியல் ஜோடிகள் தான்  டான்ஸ் பண்ணனும்ன்னு இல்ல....ரீல் ஜோடிகள் கூட டான்ஸ் பண்ணலாம்....!வாங்க....!",அந்த இளைஞன் அழைக்க...பல ஆண்களும்...பெண்களும் முன் வந்தனர்.

 

"நித்தி....!நீயும் போய் டான்ஸ் பண்ணலாம்ல....?",அவளது தோழிகள் கூற...

 

"டான்ஸெல்லாம் எனக்கு வராதுப்பா....!அதுவும் இல்லாம....என் ஜோடிக்கு நான் எங்கே போகட்டும்....?",விளையாட்டாய் மறுத்தாள் நித்திலா.

 

"உனக்கா ஜோடி கிடைக்காது....?நம்ம ஆபிஸ்ல உன்னை சைட் அடிக்கற எவனாச்சு ஒருத்தன் வந்து மாட்டுவான்...!போ....!",என்றபடி அவளைப் பிடித்து தள்ளி விட்டனர்.

 

நடனம் ஆடுவதற்கு ஏதுவாக அனைவரும் ஜோடியாக அணிவகுத்திருக்க....அனைத்து பக்கமிருந்த லைட்டிங்ஸ்சும் நடன ஜோடிகளின் மீது திருப்பப்பட்டது.மனதிற்குள் தோழிகளைத் திட்டியபடி....அவள்....அங்கிருந்து நகர்வதற்கு முன்பாகவே பாடல் ஒலிக்க ஆரம்பித்தது.

 

"முன் தினம் பார்த்தேனே....!

பார்த்ததும் தோற்றேனே....!

சல்லடைக் கண்ணாக

உள்ளமும் புண்ணானதே....!",

 

பாடலுக்கு ஏற்றவாறு அனைத்து ஜோடிகளும் நெருக்கமாக நடனமாட ஆரம்பிக்க....அந்தப் ஃப்ளோரில் நித்திலாவைக் கண்டதும்....அவளுடன் பணிபுரிபவர்கள் அனைவரும் உற்சாகமாக கூச்சலிட ஆரம்பித்தனர்.

 

மலங்க மலங்க விழித்துக் கொண்டு நின்றிருந்தவளின் முன் ஒரு கரம் நீண்டது. ஒற்றைக் காலை மடித்துத் தரையில் மண்டியிட்டபடி....அவளின் முன் தனது வலது கையை நீட்டியிருந்தான் பாலா.அவன் கண்கள்....அவளிடம் காதல் வரத்தை யாசித்துக் கொண்டிருந்தன...!என்ன யாசித்து என்ன பயன்....?அந்தப் பேதை அதைப் புரிந்து கொள்ளவில்லையே....!அந்த நிலையிலும் அவள்....அவனை ஒரு நண்பனாகத்தான் பார்த்தாள்.

 

"பாலா....!",என்றபடி அவனைப் பார்த்து விழித்துக் கொண்டிருந்தவளை....சுற்றியிருப்போரின்,"கமான் நித்திலா....!",என்ற கரகோஷம் முடுக்க....'சரி...!பிரெண்ட்தானே....!',என்ற நினைவோடு....தன் முன் நீண்டிருந்த அவன் கரத்தோடு....தன் கரத்தைப் பிணைக்கும் நேரம்....எங்கிருந்துதான் வந்தானோ தெரியவில்லை.....!புயல் வேகத்தில் அங்கு வந்த ஆதித்யன்....அவள் கையைப் பற்றி லாவகமாக சுண்டியிழுக்க....ஒரு வித லயத்துடன் இரண்டு முறை சுழன்று வந்து....அவன் நெஞ்சில் விழுந்திருந்தாள் நித்திலா.

 

தன் நெஞ்சில் விழுந்தவளின் தோளைச் சுற்றி கைகளால் அணைத்தபடி...இசைக்குத் தகுந்தவாறு....அவன் நடனமாட ஆரம்பிக்க....சுற்றியிருந்தோரின் உற்சாக கரகோஷமும்..."ஹா...!வாவ்....!",என்ற ஆரவாரங்களும் காதைப் பிளந்தன.

 

ஆதித்யன்....நித்திலாவை இழுத்த வேகமும்...அவள்...அவன் மார்பில் விழுந்த வேகமும் ஒரு நடன அமைப்பை போலவே அமைந்து விட....அங்கிருக்கும் யாருக்கும் எந்த சந்தேகமும் வரவில்லை.அதற்குள்....இதை அனைத்தையும் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்த பாலாவுடன் இணைந்து....இன்னொரு பெண் நடனமாட ஆரம்பிக்க....யாருக்கும் அது பெரிய விஷயமாகத் தெரியவில்லை.அங்கிருக்கும் நால்வரைத் தவிர....!

 

இருவர் கெளதம்...சுமித்ரா....!மற்ற இருவர்...ஆதித்யன் மற்றும் பாலா...!ஆம்...!அவளை இழுக்கும் போது....ஆதித்யனின் கண்களில் தெரிந்த உரிமை கலந்த கோபத்தை பாலா கண்டுகொண்டான்.அதிர்ச்சியில் இருந்து மீளாமலேயே அந்தப் பெண்ணுடன் நடனமாட ஆரம்பித்தான்....!

 

"துலாத் தட்டில் உன்னை வைத்து

நிகர் செய்ய பொன்னை வைத்தால்....

துலாபாரம் தோற்காதோ...பேரழகே....!

முகம் பார்த்து பேசும் உன்னை

முதல் காதல் சிந்தும் கண்ணை

அணைக்காமல் போவேனோ ஆருயிரே....!",

 

தன்னுடன்  ஆடுவது ஆதித்யன் என்று தெரிந்ததும் நித்திலாவின் மனம் குதூகலமடைந்தது.அவனுக்கு ஈடு கொடுத்தவாறு நடனமாட ஆரம்பித்தாள்.அவனது ஒரு கை நித்திலாவின் இடையைப் பற்றியிருக்க....இன்னொரு கரமோ....அவளது கரத்தோடு இணைந்திருந்தது.நித்திலா....அவன் தோளைப் பற்றியபடி....அவனது கண்களைப் பார்த்தவாறே நடனமாடினாள்.

 

"ஓ...நிழல் போல விடாமல் உன்னைத் தொடர்வேனடி....!

புகை போல படாமல் பட்டு நகர்வேனடி....!

வினா நூறு....கனாவும் நூறு....!

விடை சொல்லடி....!",

 

தங்களது M.D  நடனமாடுவது அந்தப் பணியாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியைத் தந்திருந்தது.இதுநாள் வரை....'கடுகடு'வென்ற முகத்துடன் அலுவலகத்தில் வலம் வந்தவன்....இன்று புன்னகை முகமாய் நடனமாடுவது....அவர்களை ஆச்சரியப்படுத்தியது.

 

"கடல் நீரும் பொங்கும் நேரம்....

அலை வந்து தீண்டும் தூரம்....

மனம் சென்று பார்க்காதோ ஈரத்திலே....!

தலை சாய்க்க தோளும் தந்தாய்....!

விரல் கோர்த்து பக்கம் வந்தாய்....!

இதழ் மட்டும் இன்னும் ஏன் ...தூரத்திலே....?",

 

அவன்....விழிகளாலேயே அவளிடம் கேள்வி கேட்க....அவளோ....உதட்டைச் சுழித்து ஒரு புன்னகையைப் பதிலாகத் தந்தாள்.அவனுடைய ஒவ்வொரு அசைவும் அவள் மீதான காதலை பிரதிபலிக்க....அதற்கு இணையான காதலை....தன் விழிகளில் தேக்கியபடி நடனமாடிக் கொண்டிருந்தாள் நித்திலா....!இதை அனைத்தையும் வேதனை நிறைந்த கண்களோடு பார்த்துக் கொண்டிருந்தான் பாலா.

 

"பகல் நேரம் கனாக்கள் கண்டேன்....உறங்காமலே....!

உயிர் இரண்டும் உராயாக் கண்டேன்....நெருங்காமலே....!

உனையன்றி எனக்கு ஏது....எதிர்காலமே....!",

 

மிக அழகாக தனது காதலை அவனிடம் எடுத்துரைத்தாள் நித்திலா.அவளது விழிகளில் வழிந்த காதலில்....ஒருவன் மயங்கிக் கிறங்கி மூழ்கிப் போய் உயிர்த்தெழுந்தான் என்றால்....இன்னொருவனோ....இதயம் துடிக்க துடிக்க....உயிரோடு செத்துக் கொண்டிருந்தான்.இறுதியில் பாடல் முடியும் போது....அவளது இடையை இரு கைகளாலும் பற்றித் தன் உயரத்திற்கு தூக்கியபடி....ஒரு சுழற்று சுழற்றி இறக்கி விட....அந்த ஹாலில்....கரகோஷம் அடங்க வெகு நேரமானது.

 

உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்த அந்த இளைஞனும் வாயடைத்துப் போய் நின்றிருந்தான்.

 

"வாவ்....!நம்ம ஆதித்யன் சார்....இவ்வளவு அழகா டான்ஸ் பண்ணுவாருன்னு நாங்க யாருமே நினைச்சுப் பார்க்கலை....!அண்ட்....நித்திலா மேடம்....!யுவர் டான்சிங் ஆல்சோ அமேஸிங்....!",அந்த இளைஞன் கூற....அனைவரும் அதை ஆமோதித்தனர்.

 

ஆனால்....இதை அனைத்தையும் வலியோடு பார்த்துக் கொண்டிருந்த ஒரு ஜீவனை....அங்கிருந்த யாருமே கவனிக்கவில்லை.பாலாவின் இதயத்தில் இரத்தம் வடிந்து கொண்டிருந்தது.இவ்வளவு நாள்....அவன்....எதற்காக ஏங்கினானோ....அந்தக் காதலை....அவன்....நித்திலாவின் விழிகளில் கண்டான்...!அந்தோ பரிதாபம்....!அவள் விழிகளில் தெறித்து விழுந்த காதல் அவனுக்கானதால்ல....!வேறொருவனுக்கானது.....!இந்த நினைவே....அவனைத் துடிக்கச் செய்வதற்கு போதுமானதாக இருந்தது.

 

 கத்தியின்றி...இரத்தம் இல்லாமல் அவன் செத்துக் கொண்டிருந்தான்....!நித்திலாவின் விழிகளில் தெரிந்த காதலும்....அவள் முகத்தில் மலர்ந்திருந்த புன்னகையும் அவனைக் கொன்று போட்டுக் கொண்டிருந்தது.அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் மூச்சடைக்க....அவன் வெளியேறிவிட்டான்.

 

பஃபே முறையில் உணவு பரிமாறப்பட அனைவரும் சாப்பிட்டு விட்டு ஒவ்வொருவராக கிளம்ப ஆரம்பித்தனர்.மணி ஒன்பதாகவும்....நித்திலாவும் ஆதித்யனிடம் சொல்லி விட்டுக் கிளம்புவதற்காக அவனருகில் வந்தாள்.சுமித்ரா எப்பொழுதோ கிளம்பியிருந்தாள்.அவளை ட்ராப் பண்ணுவதாக கூறிவிட்டு கௌதமும் அப்பொழுதே கிளம்பியிருந்தான்.

 

நித்திலா போகும் போது...ஒரு கூட்டம் ஆதித்யனிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டிருந்தது.

 

"ஒகே சார்....!நான் கிளம்பறேன்....!",அனைவரும் இருப்பதால் அவள்...அவனை 'சார்' என்றழைக்க..

 

"ஒரு நிமிஷம் நித்திலா....!இப்போத்தான் ஒரு டென்டருக்கான மெயில் வந்துச்சு....!ஆபிஸ் வரைக்கும் போக வேண்டிய வேலையிருக்கு....!ஸோ....கொஞ்சம் வெயிட் பண்ணு....!",கட்டளை போல் உரைத்து விட்டு....தன்னிடம் பேசிக் கொண்டிருந்தவர்களின் புறம் கவனத்தைத் திருப்பினான் ஆதித்யன்.

 

அனைவருக்கும் முன்பு எதிர்த்து வாதிடவும் முடியாமல்,"சார்....!இட்ஸ் கெட்டிங் லேட்....!மை பிரெண்ட்ஸ் ஆர் வெயிட்டிங்....!",அவள் கூறவும்....அவளுக்கருகில் நின்றிருந்த அவளது தோழிகளைப் பார்த்தவன்,

 

"நீங்க கிளம்புங்க....!உங்க பிரெண்டை நான் பத்திரமா ஹாஸ்டல்ல இறக்கி விட்டர்றேன்.....!",எனவும்...தோழிகள் அனைவரும் அவளிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினர்.

 

அனைவரும் வந்து போய் கொண்டிருக்கவும்....அவளாலும் ஆதித்யனிடம் எதையும் பேச முடியவில்லை.ஒருவாறாக....அரை மணி நேரத்திற்கு பிறகு....அனைத்தையும் பார்த்துக் கொள்ளும்படி மேனேஜரிடம் கூறி விட்டு....நித்திலாவை அழைத்துக் கொண்டு கிளம்பினான் ஆதித்யன்.

 

"ஆது....!இந்த நேரத்துல என்னை எங்கே கூட்டிட்டு போறீங்க.....?மணி என்னன்னு தெரியுமா....?பத்து மணிக்குள்ள நான் ஹாஸ்டல்ல இருக்கணும்....!",அவள் பாட்டுக்கு கத்திக் கொண்டிருக்க....அவன் பாட்டிற்கு காரை ஓட்டிக் கொண்டிருந்தான்.

 

 "உங்ககிட்டேதான் பேசிக்கிட்டு இருக்கேன் ஆது....!பத்து மணிக்கு மேல ஹாஸ்டலுக்கு போனா....உள்ளே விட மாட்டாங்க....!மணி இப்போ 9.45....",அவளைத் திரும்பிப் பார்த்தவன்,

 

"உள்ளே விடலைன்னா ரொம்ப சந்தோஷம்....!நீ என் கூடவே...நம்ம வீட்டிலேயே தங்கிக்கலாம்....!ஆனால் பேபி...உன் ஹாஸ்டல்ல எத்தனை மணிக்கு போனாலும்....உள்ளே அனுமதிப்பாங்கன்னு எனக்குத் தெரியும்....!",அசால்ட்டாக கூறிவிட்டுத் திரும்பிக் கொண்டான்.

 

"உங்களுக்கு எப்படித் தெரியும்....?",

 

"பின்ன....உன் ஹாஸ்டலைப் பத்தி விசாரிக்காம....அதனோட சேஃப்டி எப்படின்னு தெரியாம....உன்னை இவ்வளவு நாள் அங்கே தங்க வைச்சிருப்பேன்னா நினைக்கிற.....?நெவர்....!நீ சென்னையில வந்து இறங்கின அன்னைக்கே....நீ தங்கியிருக்கிற 'தளிர் ஹாஸ்டல்' பத்தி விசாரிக்கச் சொல்லி டிடெக்ட்டிவ் ஏஜென்சிக்கு சொல்லிட்டேன்.....!",

 

அவனுடைய காதலில்....எப்பொழுதும் போல்....அப்பொழுதும் சுகமாய் தொலைந்து போனாள் அந்தப் பாவை....!அதற்கு மேல் அவள் எதுவும் பேசவில்லை.

 

'ஒருவேளை...பாலாவோட டான்ஸ் பண்றதுக்கு ரெடியானேனே....அதனால கோபமா இருக்காரே....?',என்று எண்ணமிட்டபடி....அவன் முகத்தைப் பார்க்க...அவன் முகத்தில் கோபம் இல்லை.

 

ஆனால்...அவன் அப்பொழுது பாலாவை பற்றித்தான் நினைத்துக் கொண்டிருந்தான்.நித்திலாவின் முன் மண்டியிட்டு அமர்ந்திருந்தவனின் கண்களில் அப்படியொரு காதல் தெரிந்தது.அதை அந்த காதலுக்கு உரியவள் கண்டு கொள்ளவில்லை.ஆனால்....அந்தக் காதலுக்கு உரியவளின் காதலுக்கு உரியவன் கண்டுகொண்டான்.ஆதித்யனின் முகத்தில் யோசனை வந்தமர்ந்தது.

 

அதற்குள் அலுவலகத்திற்குள் கார் நுழையவும்,"ஆது....!உண்மையாலுமே ஆபிஸ்ல வேலையிருக்கா....?நீங்க சும்மா சொல்றீங்கன்னு நினைச்சேன்....!என்ன வேலை....?",கேள்வி கேட்டாள் அவள்.

 

"ம்....சொல்றேன்.....!இறங்கு....!",அவன் முகத்தில் இப்போது குறும்புப் புன்னகையொன்று குடியேறியிருந்தது.

 

'இந்த நேரத்துல என்ன வேலையோ தெரியல....?இவருதான் தூங்க மாட்டாருன்னா....என் தூக்கத்தையும் கெடுக்கிறாரு....!',புலம்பியபடியே ஆதித்யனின் அலுவலக அறைக்குள் நுழைந்தவள்...ஆதித்யனிடமிருந்து எந்த சத்தமும் வராமல் போகவும் திரும்பிப் பார்த்தாள்.திரும்பி பார்த்தவளின் விழிகள் இன்னும் அகலமாக விரிய....பயத்தில் அவளது நாக்கு சென்று மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது.

 

அவள் பயத்திற்கும் ஒரு காரணம் இருந்தது.அவள் பின்னாலேயே உள்ளே நுழைந்த ஆதித்யன்...அந்த அலுவலக அறையின் கதவைப் பூட்டியதோடல்லாமல்....தான் அணிந்திருந்த கோட்டை கழட்டி....அருகில் இருந்த சோபாவில் வீசிவிட்டு....அவனது சட்டையின் முதலிரண்டு பட்டன்களை வேறு கழட்ட ஆரம்பித்தான்.அவன் கண்களில் அப்படியொரு வேட்கை தெரிந்தது.

 

"எ...என்ன....?",பயத்தில் வார்த்தைகள் தந்தியடிக்க....அவள் மெதுவாக பின்னால் நகர்ந்தாள்.

 

அவன் என்னவோ....எதார்த்தமாகத்தான் சட்டையை கழட்டினான்.அவள் விழிகளில் தெரிந்த பயத்தில் அவனுக்குள் சுவாரசியம் வந்தது.அவளது பயமே...அவனது மோகத்தை தூண்டி விட...அவன்...அவளை நெருங்கினான்.

 

"நான் உன்கிட்ட என்ன சொன்னேன்....?",தனது சட்டையின் கை பட்டனை கழட்டியபடியே அவன் வினவ..

 

"எ...என்ன சொன்னீங்க....?",திணறினாள் அவள்.

 

அதற்குள் அவன் தனது முழுக்கை சட்டையை மேலேற்றியபடி அவளை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்திருந்தான்.

 

"எ....எதுக்கு ச....சட்டையை கழட்டறீங்க....?",அவள் பின்னால் நகர..

 

"இனி....அது தேவையில்லை பேபி....!அது இருந்தா...நமக்கு இடைஞ்சலா இருக்கும்....!சரி சொல்லு....!நான் உன்கிட்ட என்ன சொல்லியிருந்தேன்....?",இப்போது அவனது கைகள்....அவனுடைய பெல்ட் பக்கிள்ஸை விடுவிக்க....அவள்....பயத்தில் வியர்த்து விறுவிறுத்து போனாள்.

 

அவளது விழிகளில் தெரிந்த மிரட்சியில் அவன் கள்ளுண்ட வண்டானான்...!

 

"ஹைய்யோ....!அதையெல்லாம் எதுக்கு க...கழட்டறீங்க....?",பதறியபடி அவள் வேகமாக பின்னால் நகர..

 

தனது கையில் இருந்த பெல்ட்டை....மாலையாக்கி அவளைத் தன்னை நோக்கி இழுத்தவன்,"சொல்லு டி....?நான் உன்கிட்ட என்ன சொன்னேன்.....?",மீண்டும் அவன் அதே கேள்வியைக் கேட்க...இப்போது....அவன் கைகள் அவளை அணைத்து தனக்குள் சிறை வைத்தன.

 

"எ...என்ன சொன்னீங்க.....?",அவள் மீண்டும் வார்த்தைகளுக்கு தந்தியடிக்க...

 

"இன்னொரு முறை உன்னை புடவையில் பார்த்தேனா....அப்புறம் நடக்கற எதுக்கும் நான் பொறுப்பில்லைன்னு சொன்னேனா.....இல்லையா....?",அவனது மூச்சுக்காற்று அவள் முகத்தில் வந்து மோதியது.

 

எச்சிலைக் கூட்டி விழுங்கியபடி...அவள் மிரண்டபடியே நிற்கவும்,"சொல்லு டி....?",என்றபடி அவளை....மேலும் தன்னுடன் இறுக்கினான் அவன்.

 

"ஆ....ஆமா....!",திணறியபடியே வந்து விழுந்தன வார்த்தைகள்.

 

"ஸோ...இப்போ....இங்கே நடக்கப் போற எதுக்கும் நான் பொறுப்பில்லை.....!",என்றபடியே அவள் கழுத்து சரிவில் முகம் புதைக்க...

 

"ஆது....!நோ....!",பதட்டத்தில் மூச்சு வாங்கியது அவளுக்கு.

 

"என்ன பேபி.....?நான் இன்னும் ஆரம்பிக்கவே இல்ல....அதுக்குள்ள....உனக்கு இப்படி மூச்சு வாங்குது....?",அவன் குறும்பாய் கண்ணைச் சிமிட்ட..

 

அவன் அசந்த நேரம் பார்த்து....அவனைத் தள்ளி விட்டு விட்டு இவள் ஓட....இரண்டே எட்டில் அவளை அடைந்தவன்....அவளுக்குப் பின்னால் இருந்தபடியே....அவளது வயிற்றில் கரம் பதித்து தன்னை நோக்கி இழுத்தான்.

 

இவள் ஓடிய வேகத்திலும்....அவன்....அவளை இழுத்த அவசரத்திலும்....அவளது புடவை விலகி....அவளது குழைவான வயிற்றுப் பிரதேசத்தில் அவனது ஒற்றைக் கை பதிந்திருந்தது.இருவருமே இப்படியொரு சூழ்நிலையை எதிர்பார்க்கவில்லை.

 

தனது கைகள் பதிந்த அந்தப் பகுதியின் மென்மையில் கரைந்து போய் ஆதித்யன் நிற்க....தனது வெற்று வயிற்றில் பதிந்த அவனுடைய உள்ளங்கை சூட்டில் உருகிப் போனவளாய் நின்றிருந்தாள் அவள்.

 

அந்த நிலையிலேயே....அவளைத் தன்னோடு சேர்த்து இறுக்கியவனின் உதடுகள்....அவளது வெற்று முதுகில் ஊற ஆரம்பித்தன.அவள்....தனது கூந்தலை முன்புறமாக போட்டிருந்தது அவனுக்கு வசதியாய் போக....அவனது உதடுகள் அவளது முதுகில் இன்ச் இன்ச்சாக நகர்ந்தன.

 

முன்புறம் இருந்த கரமோ....இன்னும் தன் அழுத்தத்தைக் கூட்டியது.அவனது நெருக்கத்தில்....அவள் கொஞ்ச கொஞ்சமாய்....காணாமல் போய்க் கொண்டிருந்தாள்.முதுகில் ஊர்ந்த அவனுடைய உதடுகள்....அவளது பிடரியில் அழுத்தி ஒரு முத்தம் வைத்து விட்டு....அவளது தோள் வளைவில் இளைப்பாறின.

 

வயிற்றில் பதிந்திருந்த கரமோ இன்னும் கொஞ்சம் முன்னேறி....தனது ஆராய்ச்சியைத் தொடங்க....நித்திலாவின் உடல் ஒரு முறை துள்ளி அடங்கியது.அவனது உதடுகள் வழங்கிய சூடான முத்தங்களிலும்....அவனது ஒற்றைக்கரம் நிகழ்த்திய மாயாஜாலங்களிலும்....அவளது மயிர்க்கால்கள் சிலிர்த்து எழுந்தன.

 

இருவருக்குமே....உச்சந் தலையிலிருந்து....உள்ளங்கால் வரை வேக வேகமாக புது இரத்தம் பாய....இருவருக்குள்ளும் ஹார்மோன்கள் ஆட்டம் போடத் தொடங்கின...!

 

அதன் விளைவு....அவள் பின்புறமாகவே அவன் மீது சாய....அவனோ...தனக்குள் நடந்த உணர்ச்சிப் போராட்டத்தைத் தாங்க முடியாமல்....அவளது தோள் வளைவில்....தனது பற்களால் தடம் பதித்தான் சற்று முரட்டுத்தனமாகவே....!

 

வலிதான்....!ஆனால்...அதுவும் சுகமானதொரு வலியாக....தேவையானதொரு வலியாக மாறிப் போனது அந்த மங்கைக்கு....!

 

அவளது மேனியில் தனது கரங்களை மேலும் மேலும் முன்னேற விட்டவன்....தனது கரங்களின் அழுத்தத்தை கூட்டிக் கொண்டே போனான்.அவனது செயல்களுக்கு....அவள் அணிந்திருந்த புடவை மேலும் வசதி செய்து கொடுக்க....அவன் பாடு கொண்டாட்டமானது....!

 

மயங்கி கிறங்கிப் போய் நின்றிருந்தவளின் பெண்மை....அவளது காதோரத்தில் ஒலித்த அவனது சீறலான மூச்சுக்காற்றில்....பட்டென்று விழித்துக் கொண்டது.எச்சரிக்கை உணர்வு தலை தூக்க..

 

"நோ ஆது....!இது வே...வேண்டாம்.....!",என்றாள் முணகலாக.

 

"ஏன்....?",முரட்டுத்தனமாக கேட்டவனின் உதடுகள்....அதை விட முரட்டுத்தனமாக அவளது காது மடலை கவ்வியது.

 

பாவம்....அந்தப் பேதையவள்....!'ஏன்...?' என்று கேட்டால் என்னவென்று சொல்வாள் அவள்....? 'திருமணத்திற்கு முன்பு இது தவறு...!',என்று அவள் கூறினால்....'ஸோ வாட்....?' என்று அசட்டையாக கேட்டு வைப்பான் அவன்...!அதையும் மீறி...'நோ ஆது....!' என்று இவள் பிடிவாதத்தால்...'அதுதான் நமக்கு கல்யாணம் ஆகிடுச்சே......?' என்று அவள் கழுத்தில்...அவன் அணிவித்த செயினை காட்டி வைப்பான் அந்தக் காதல் முரடன்.....!

 

அவளது பலவீனமே....அவளுடைய காதுமடல்தான்....!அங்கு....அவனுடைய மூச்சுக்காற்று பட்டாலே....அவள்...மயங்கி நின்று விடுவாள்.இன்றோ...அந்த இடத்தில் அவனது உதடுகள் நடத்திய ஊர்வலத்தில்....பெண்ணவள் தன்னையும் மறக்கத் தொடங்கினாள்.

 

"ஆது....!",அழைக்க முயன்றாலே தவிர....வார்த்தை வரவில்லை....!வெறும் காற்றுதான் வந்தது.

 

அவனது கரத்தின் அத்துமீறல்களைத் தடுப்பதற்காக....அவள்....அவன் கரத்தின் மீது தனது கையை வைத்தால்....அந்தக் கள்வனோ....அவளது கரத்தையும் சேர்த்து துணைக்கழைத்துக் கொண்டு தன் பயணத்தைத் தொடர்ந்தான்.

 

 பின்புறமாகத் திரும்பி நிற்பதால்தானே....இவனது கரங்களுக்கு அணை போட முடியவில்லை....?இப்பொழுது பார்....!என்று எண்ணியபடி அவள்...முயன்று முன்புறமாகத் திரும்பி....அவன் முகம் பார்க்க....அந்த விஷமக்காரனுக்கு இன்னும் வசதியாய் போனது.முன்பு....அவனது கரங்கள் பதிந்த இடங்களில்...இப்பொழுது அவனுடைய உதடுகள் பதிந்து....தனது முத்தாரத்தைத் தொடங்கின....!

 

எங்கேயோ பறக்க இருந்த உடலையும்....மனதையும் முயன்று வெகு சிரமப்படுத்த தனது கட்டுக்குள் கொண்டு வந்தவள்....அவனது தலைமுடியை பிடித்து இழுத்து....தனது முகம் காணச் செய்தவள்,"நோ ஆது...!",என்றாள் சிறு கண்டிப்புடன்.

 

இவ்வளவு நேரம் இருந்த சுகந்த நிலை தடைபடவும்,"ப்ச்....ஏண்டி....?",என்றான் எரிச்சலாக.

 

அவன் முகத்திலேயே தனது பார்வையை பதித்தவள்,"நோ மீன்ஸ் நோ....!",என்றாள் அழுத்தமாக.

 

அந்த மென்மையான காதலியின் சொல்லுக்கு....அந்த முரட்டுத்தனமான காதலன் கட்டுப்பட்டான்.வெறுமனே அவளைக் கட்டிக் கொண்டு....அமைதியாய் நின்றான்.இதுதான் காதல்....!ஒரு மனம் வரைமுறை இன்றி...எல்லைகளைக் கடக்கத் துணியும் போது....இன்னொரு மனம்....நிதர்சனத்தை உணர்ந்து....தடுத்து இழுத்து வரும்.தீராத வேட்கையிலும்....தாபத்திலும் எரிந்து கொண்டிருக்கும் அந்த மனமும்....இன்னொரு மனதின் காதலுக்கும்....கண்டிப்பிற்கும் கட்டுப்பட்டு பெட்டிப்பாம்பாய் அடங்கி விடும்.

 

இதுதான் காதல் செய்யும் மாயம்....!இதுதான் காதல் நிகழ்த்தும் அதிசயம்....!எப்பேர்ப்பட்ட நெருப்பையும்...காதல் குளிர வைத்து விடும்.

 

அவளை அணைத்துக் கொண்டு நின்றிருந்த ஆதித்யனின் மனதில் காதலோடு....தாபமும் பொங்கி வழிந்து கொண்டிருந்தது.ஏனோ...அவளைப் புடவையில் கண்டால் மட்டும்...அவன்...அவனாய் இருப்பதில்லை.அவளது புடவையின் மடிப்பில் அவன் தொலைந்து போவது என்னவோ உண்மைதான்....!

 

"பேபி....!ஐ நீட் யூ வெரி பேட்லி......!",அவன் குரலில் தெரிந்த வேட்கையில் அவள் தடுமாறிப்போனாள்.அன்று....அந்த மழைநாளில்....அவள்...அவனிடம் காதல் உரைத்த நாளில்....இதே அளவு வேட்கையைத்தான் அவன் கண்களும்....குரலும் பிரதிபலித்தன...!

 

அவளுக்குத் தெரியும்....!அவன் மனதில் எரிந்து கொண்டிருக்கும் மோகத் தீயை....தன்னால் மட்டுமே அணைக்க முடியும் என்பதை அவள் அறிந்து வைத்திருந்தாள்.இப்பொழுது அவனிடம் இருந்து விலகினால்....அவனது வேட்கை....வெறித்தனமாக மாறும்....அவனுடைய பிடிவாதம்....முரட்டுத்தனமாக உருவெடுக்கும்...என்பதை அறிந்தவளாய்....அவள்...அவனை மென்மையாக அணைத்துக் கொண்டாள்.

 

இதுவும் காதல்தான்....!தன் இணையின் உணர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுத்து....எல்லைகளை கடக்காமல்....எல்லைகளை ஜெயித்து வருவது....!

 

அவளது அணைப்பையே சம்மதமாக எடுத்துக் கொண்டவன்,"எனக்கு மொத்தமும் வேண்டாம் பேபி....!ஆனால்....முத்தம் மட்டுமாவது வேணும்....!",அங்கு இருவரின் உணர்ச்சிகளும் எல்லைகளைக் கடக்காமல்...காதலோடு எல்லைகளை ஜெயித்து வந்தது.

 

அவனது உதடுகள்....அவளது இதழ்களைத் தேடிச் சென்று சிறைப்படுத்தியது.தனது மொத்த காதலையும்...தாபத்தையும்...மோகத்தையும் அவளது இதழ்களில் பிரயோகித்துக் கொண்டிருந்தான் அவன்.

 

இவ்வளவு நாள் காத்திருப்பின் வேகமும்....வேட்கையும்...அவளது இதழ்களை மிக வன்மையாக ஆக்கிரமித்தன.அவனது முரட்டுத்தனத்தைத் தாங்க முடியாமல்....அவளது கைகள் பிடிமானத்திற்காக காற்றில் துளாவி....பிறகு....அவன் பின்னந்தலை முடியையே பிடிமானமாக இறுக்கப் பற்றிக் கொண்டன.

 

அவளது கழுத்தை வளைத்துப் பிடித்திருந்தவன்....அவளது இதழ்களுக்குள் மேலும் மேலும் மூழ்கிக் கொண்டிருந்தான்.தன் விழிகளை மூடி...அவனது முரட்டுத்தனத்தைக் காதலோடு ரசித்துக் கொண்டிருந்தாள் நித்திலா.

 

நிமிடங்கள் ஓடிக் கொண்டிருந்தன....!அவன்...அவளை விட்டபாடாக இல்லை...!ஒரு கட்டத்திற்கு மேல் முடியாமல்....மூச்சுக்காற்றுக்காகத் தவிக்க ஆரம்பித்தவள்...அவனிடமிருந்து விலக போராட....அந்தக் காதல் தீவிரவாதியா....அவள் தேன் சிந்தும் அதரங்களை விட்டுப் பிரிய மறுத்தான்.

 

'பட் பட்'டென்று தனது நெஞ்சில் அவள் அடித்த அடியை....சுகமாய் ஏற்றுக் கொண்டவன்....தனது மூச்சுக்காற்றையே....அவளுக்கு சுவாசிக்க கொடுத்தான்....!இப்பொழுது....அவனுடைய வேகமும்...வேட்கையும் குறைந்து...அவனது இதழொற்றலில் ஒரு நிதானம் வந்திருந்தது.

 

மிக வன்மையாய் அவளது இதழ்களை சுவைத்தவன்....இப்போது....அதற்கு மருந்திடுவது போல்...மிக மென்மையாய் தனது யுத்தத்தை ஆரம்பித்தான்.

 

இவ்வாறாக....இந்த நீண்ட நெடிய முத்த யுத்தம் முடிவுக்கு வந்த போது....யுத்தம் செய்த இருவருமே மூச்சு வாங்கினர்.தனது உயிரைக் கொடுத்து யுத்தம் செய்தவன் குறும்பாய் புன்னகைக்க....அந்த யுத்தத்தில் எந்த பங்கும் ஆற்றாமல் அமைதியாய் நின்றிருந்தவளோ....களைத்துப் போயிருந்தாள்.

 

"முரடா....!சரியான ராட்சஸா....!",தன் கையை மடக்கி அவன் நெஞ்சில் குத்த..

 

"ஹா..ஹா....!",உரக்கச் சிரித்தான் அவன்.

 

"சிரிக்காதே டா....!வலிக்குது....!",சிணுங்கியவாறு அவள்...தன் இதழ்களைத் தொட்டுப் பார்க்க,

 

"பின்ன....இவ்வளவு நாள் காயப் போட்டா....இப்படித்தான்....முன்ன பின்ன இருக்கத்தான் செய்யும்....!",வெட்கமில்லாமல் அவன் கூற..

 

"ச்சீய்....!",அவள்தான் வெட்கப்பட்டுப் போனாள்.

 

"ரொம்பவும் வலிக்குதா டி....?",அவள் இதழ்களை மென்மையாக வருடியபடி அவன் கேட்க...சிவந்து கசங்கிப் போய் இருந்த அவளது இதழ்கள் பறைசாற்றின அவனது முரட்டுத்தனத்தை...!

 

பட்டென்று அவன் கையைத் தட்டி விட்டவள்,"ஆமா....இப்போ வந்து கேளு....!",போலியாய் சலித்துக் கொண்டாள் அவள்.

 

அதன் பிறகு....அவளை கெஞ்சி...கொஞ்சி சமாதானப்படுத்தி....அவளை....அவன் ஹாஸ்டலில் இறக்கிவிட்ட போது மணி பதினொன்று ஆகியிருந்தது.

 

அகம் தொட வருவான்....!!!



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எவனோ என் அகம் தொட்டு விட்டான்...!!! -    அகம் 1

எவனோ என் அகம் தொட்டு விட்டான் - Final

எவனோ என் அகம் தொட்டு விட்டான்...! - அகம் 8