எவனோ என் அகம் தொட்டு விட்டான் - அகம் 48
அத்தியாயம் 48 :
திங்கட்கிழமை காலை....அறைக்குள் நுழைந்த நித்திலாவை...ஆதித்யன் நிமிர்ந்தும் பார்க்கவில்லை.அவள் சொன்ன 'குட் மார்னிங் ஆது....!',என்றதற்கு கூட எந்தவொரு பதிலும் இல்லை.கடினமான முகத்துடன் தனது லேப்டாப்பையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.
'ஹைய்யோ....!கோபத்தோட உச்சியில போய் உட்கார்ந்திருக்காரே....!இவரை எப்படி சமாதானப்படுத்தி கீழே இறக்கி கொண்டு வர்றது....?',சிந்தனையுடன் தனது வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தவளின் மனம்...அந்த வேலையில் லயிக்கவில்லை.
மெதுவாக அவனை ஏறிட்டவள்,"ஆது....!உங்களுக்காகத்தான் நான் லீவை கேன்சல் பண்ணிட்டு இன்னைக்கே வந்துட்டேன்....!",ஆர்வமாக அவன் முகம் பார்த்து அவள் கூற...அவனிடம் எந்த ஒரு பிரதிபலிப்பும் இல்லை.அவன் பாட்டுக்கு லேப்டாப்பை தட்டிக் கொண்டிருந்தான்.
"உஸ்....!",மூச்சை இழுத்து விட்டவள்...சிறிது நேரம் அமைதியாக இருந்தாள்.வேலை விஷயமாகக் கூட தன்னிடம் பேச மறுப்பவனைக் கண்டு அவளுக்கு ஆயாசமாய் இருந்தது.
ஒரு எல்லைக்கு மேல் அவனுடைய பாராமுகத்தைப் பொறுக்க முடியாமல்,"எதுக்கு ஆது இவ்வளவு கோபம்....?",என்றாள் சற்று மனத்தாங்களுடன்.
"..........."
ம்ஹீம்....அவனிடம் அப்பொழுதும் பதிலில்லை.மருந்துக்கு கூட அவன்....அவளைத் திரும்பிப் பார்க்கவில்லை.
பொறுக்க முடியாமல் தனது இருக்கையில் இருந்து எழுந்து அவனருகே சென்றவள்....கோபத்துடன் அவனது லேப்டாப்பை பிடுங்கி மூடி வைத்தாள்.
"ப்ச்....!இப்ப எதுக்கு டி இப்படி பண்ணிக்கிட்டு இருக்க....?நான் பேசறதை தொல்லைன்னு சொன்னவள் தானே நீ....?இப்போ எதுக்கு 'என்கூட பேசு...பேசு...'ன்னு நச்சரிச்சுக்கிட்டு இருக்க....?",அவன் சற்று காரமாகவே வினவ..
"நான் அப்படி பேசினது தப்பு தான்....!அதே சமயம்....நீங்க அப்படி பண்ணினதும் தப்புதானே....?",
"எது டி தப்பு....?என் பொண்டாட்டிக்கிட்ட நான் பேசறது தப்பா....?",அவன் குரலில் இப்பொழுதும் கோபம் குறையவில்லை.
"இங்கே பாருங்க ஆது....!நான் உங்களுடைய காதலி மட்டும் இல்லை....!என் அம்மா அப்பாவுக்கு பொண்ணும் கூட....!",அவனுக்குப் புரிய வைத்துவிடும் வேகம் அவள் குரலில் இருந்தது.
"நான் இல்லைன்னு சொல்லலையே.....?எனக்கு காதலியா இருந்துட்டு....உங்க அம்மா அப்பாக்கு பொண்ணா இருன்னுதான் நான் சொல்ல வர்றேன்....!உங்க அம்மா அப்பாவுக்கு பொண்ணா இருந்துட்டு....எனக்கு பொண்டாட்டியா இருக்கலாம்ன்னு நினைக்காதே.....!",அவனிடம் அப்படி ஒரு அழுத்தம்....!ரௌத்திரம்....!
அவன் பேச்சைக் கேட்டவளுக்கு....ஏனோ தனக்கும் தன்னைப் பெற்றவர்களுக்கும் இடையில் ஒரு திரை விழுவதைப் போல் உணர்ந்தாள்.அந்த திரையையும் அவன் வலுக்கட்டாயமாக ஏற்படுத்துவத்தைப் போல் அவள் மனதிற்குத் தோன்றியது.
"குட் ஜோக் ஆது....!என் அம்மா அப்பா இல்லாம நான் உங்களுக்கு கிடைச்சிட்டேனா.....?அவங்க இல்லாம...என்னால இந்த உலகத்திற்கு வந்திருக்க முடியாது....!அது மட்டும் இல்ல....இருபத்தி இரண்டு வருஷமா என்னை உயிருக்கு உயிரா வளர்த்தவங்க அவங்க....!முதல்ல...நான் அவங்களுக்கு மகள்...!அதுக்குப் பிறகுதான் உங்களுக்கு பொண்டாட்டி....!"
சுறுசுறுவென்று ஏறிய கோபத்தை தன் கைகளை அழுந்த மூடிக் கட்டுப்படுத்தியவன்,"இருக்கக் கூடாது....!உனக்கு முதன்மையானவனா நான் மட்டும்தான் இருக்கணும்....!அவங்க உன்னைப் பெத்து வளர்த்தவங்கதான்....!நான் இல்லைன்னு சொல்லல....!எப்போ உன்னைக் காதலிக்க ஆரம்பிச்சேனோ....அப்பவே நீ என்னுடையவளாய் மாறிட்ட....!என்னுடைய பொண்டாட்டி அப்படிங்கிற நிலையில இருந்துதான்....நீ உன் பெத்தவங்களைப் பார்க்கணும்....!அவங்களுக்கு மகளா இருந்துட்டு....நீ என் பொண்டாட்டியா இருக்க கூடாது....!",ஆங்காரமாய் கத்தியவனின் பேச்சைக் கேட்டவளுக்கு குழப்பம்தான் வந்தது.
"எதுக்கு இப்படி உளறிக்கிட்டு இருக்கீங்க.....?பொதுவா....காதலி வேற யாராவது ஆண்கிட்ட பேசும் போதுதான்...காதலன் பொஸஸிவ்வா ஃபீல் பண்ணுவான்னு கேள்விப்பட்டிருக்கிறேன்....!நீங்க என்னடான்னா....என் அம்மா அப்பாக்கிட்ட பேசறதுக்கே இவ்வளவு தடை போடறீங்க....?",
"உளறுறேனா....?நீ எப்படி வேணா வைச்சுக்க.....!எனக்கு அதைப் பத்தி கவலையில்லை....!நான் உன்கிட்ட ஏற்கனவே சொன்னதுதான் நித்திலா....!உனக்கு நான் மட்டும்தான் முதன்மையானவனா இருக்கணும்....!உன்னுடைய முழுமையான காதல்...பாசம்...கோபம் இப்படி எதுவா இருந்தாலும் எனக்கு....எனக்கு மட்டும்தான் கிடைக்கணும்....!உன்னுடைய பார்வையை மாத்திக்க....!எனக்குப் பிறகுதான் மத்தவங்க....அப்படின்னு பார்க்க ஆரம்பி.....!அது உன்னைப் பெத்தவங்களா இருந்தாலும் சரி....!புரிஞ்சுதா....?",
அவனுடைய காதல் அப்படித்தான் இருந்தது....!மிக மிக வன்மையாக....தீவிரவாதத்தோடு....முரட்டுத்தனமாக....அவளை அப்படியே தனக்குள் அடக்கி வைத்து விட வேண்டும் என்ற பிடிவாதம் நிறைந்ததாக அவனுடைய காதல் இருந்தது....!
அவனுடைய அந்தக் காதல்....அவளுடைய அடிவயிறை ஜில்லிடச் செய்தது.ஒரு மனம்....அவனுடைய வெறித்தனமான இந்தக் காதலில் மூச்சுத் திணறத் திணற சுகமாக மூழ்கி போனாலும்....அவளுடைய இன்னொரு மனமோ....இந்த தீவிரவாதக் காதலைக் கண்டு பயந்து நடுங்கிப் போனது...!
'இவனுடைய காதலில் இருக்கும் பிடிவாதம்....எங்கு சென்று முடியுமோ....?',என்று மனதிற்குள் ஒரு அச்சம் எழுவதை அவளால் தடுக்க முடியவில்லை.
"ஆது....!நான்தான் உங்களுடைய மனைவி அப்படிங்கறதை எப்படி மறுக்க முடியாதோ....அதே மாதிரிதான்....நான் என்னுடைய அம்மா அப்பாவுக்கு பொண்ணு அப்படிங்கறதையும் மறுக்க முடியாது....!நாளைக்கு நமக்கு கல்யாணமாகி நான்....உங்க வீட்டுக்கு வந்த பிறகு....நான் உங்களுக்கு மனைவியா மட்டும் இருக்க முடியாது.....!உங்க அம்மா அப்பாவுக்கு ஒரு மருமகளா....உங்க தாத்தா பாட்டிக்கு ஒரு பேத்தியா....நம்ம குழந்தைகளுக்கு ஒரு நல்ல அம்மாவா....இப்படி பல கடமைகள் எனக்கு இருக்கு....!அதே மாதிரிதான்....என் அம்மா அப்பாவுக்கு ஒரு மகளா எனக்கும் சில கடமைகள் இருக்கு....!",அவள் பொறுமையாக எடுத்துக் கூறிக் கொண்டிருக்க..
"உன்னுடைய கடமை எதையுமே நான் மறுக்க மாட்டேன்....!நீ அதை செய்யக் கூடாதுன்னு தடுக்கவும் மாட்டேன்....!சொல்லப் போனால்....உன் கூடவே இருந்து...உன் கடமைகள்ல சரிபாதியை நான் ஏத்துக்குவேன்....!",என்றான் பட்டென்று.
"அப்புறம் எதுக்கு....என்னை ஊருக்கு அனுப்பி வைச்சிட்டு....பின்னாடியே போன் மேல போன் பண்ணி....என் அம்மா அப்பா கூட டைம் ஸ்பெண்ட் பண்ண முடியாம தடுத்தீங்க.....?",
"நான் ஒண்ணும் நீ உன் பெத்தவங்க கூட பேசறதை தடுக்கணும் அப்படிங்கற எண்ணத்துல போன் பண்ணல....!உண்மையிலேயே நான் உன்னை மிஸ் பண்ணினேன்....!இந்த ஆபிஸ்ல ஒவ்வொரு பொருளும் உன்னை ஞாபகப்படுத்துச்சு.....!ஒவ்வொரு நிமிஷமும்....நான் உன் நினைப்பிலதான் இருந்தேன்...!உன் குரலை கேட்டாலாவது கொஞ்சம் நல்லாயிருக்குமேன்னுதான்....உனக்கு அடிக்கடி போன் பண்ணினேன்....!ஆனால்...இப்போத்தானே தெரியுது.....!நான்தான் பைத்தியக்காரன் மாதிரி உன்னை நினைச்சுக்கிட்டு இருந்திருக்கிறேன்....!நீ அங்க ஜாலியா உன் அம்மா அப்பாவைக் கொஞ்சிக்கிட்டு என் நினைப்பே இல்லாம இருந்திருக்க....!நான்தான் கேனையன் மாதிரி உனக்கு அடிக்கடி போன் பண்ணி உன்னைத் தொல்லை செய்திருக்கிறேன்....!",அவள் தன்னைத் தேடவில்லை என்ற நினைவில் அவன் கோபமாகப் பேசினான்.
அவன் சுமற்றிய குற்றத்தில் அவளுக்கு சற்று எரிச்சல் எட்டிப்பார்த்தது.
'என்ன....?நான் இவரை நினைக்கலையா....?அம்மா அப்பாக்கிட்ட பேசிட்டு இருந்தாலும்....என் நினைப்பு இவரை சுற்றித்தானே இருந்துச்சு.....!நொடிக்கு பத்து முறை போன் செய்தாலும்....ஒவ்வொரு முறையும் ஆசையோடதானே இவர்கிட்ட பேசினேன்....?ஏதோ டென்சன்ல 'தொல்லை...அது..இது'ன்னு பேசிட்டேன்.....?அதுக்காக....நான் இவரை மிஸ் பண்ணலைன்னு ஆகிடுமா.....?',மனதிற்குள் பொரிந்து தள்ளியவள்...வெளியே..
"ஆமா....!எனக்கு உங்க நினைப்பு சுத்தமா இல்ல....!உங்களைப் பத்தின நினைப்பே இல்லாம...அங்கே எங்க வீட்டில ரொம்ப ஜாலியா இருந்தேன்.....!உங்க மேல ஆசையே இல்லாமதான்....ஒரு நாளைக்கு நீங்க நூத்தி இருபது முறை கால் பண்ணினாலும்....அப்புறம் எப்போ பண்ணுவீங்கன்னு ஆசையோட காத்திருந்தேன்.....!உங்க மேல காதல் இல்லாமதான்....நீங்க கோபமா போனை கட் பண்ணின உடனே....உங்களை சமாதானப்படுத்தணும்ன்னு....என் அம்மா அப்பாக்கிட்ட பொய் சொல்லிட்டு ஓடி வந்தேன்....!",மூக்கு விடைக்க....ஊடலோடு அவனிடம் சண்டை பிடித்தவள் தனது இருக்கைக்கு சென்று அமர்ந்து விட்டாள்.
அவளுடைய ஊடலோடு கலந்த இந்தக் கோபம் அவனை ரசிக்க வைத்தது.
'அவளும் தன்னைத் தேடியிருக்கிறாள்....!',என்ற நினைவு அவனுடைய மன சுணக்கத்தை போக்கடித்தது.
'பாவம்....!அவள் கூட ரொம்பவும் சண்டை போட்டுட்டோம்....!எனக்காக அடிச்சுப் பிடிச்சு ஓடி வந்திருக்கிறா....!',திரும்பி அவளைப் பார்த்தால்...அவளோ....கோபத்தில் மூக்கு நுனிவரை சிவந்து போய் அமர்ந்திருந்தாள்.
"ஏய்....!பொண்டாட்டி....!",அவன் கூப்பிட்ட மறு நொடி 'டொக்..டொக்..'கென்று கீபோர்டை தட்ட ஆரம்பித்தாள்.
"பேபி.....!உன்னைத்தான்....!",அவன் மீண்டும் அழைக்க..
"............",அவளிடம் பதிலில்லை.
கோபத்தில் புசுபுசுவென்று மூச்சு வாங்கியபடி....கீபோர்டை போட்டு தட்டு தட்டு என்று தட்டிக் கொண்டிருந்தாள்.
"குட்டிம்மா.....!",மென்மையாய் அவன் அழைக்க....அவ்வளவுதான்....!அடுத்த நொடி....அவள் டேபிள் மேல் இருந்த பென் ஸ்டாண்ட் ஒன்று இவனை நோக்கிப் பறந்து வந்தது.
"அய்யோ.....!அம்மா....!",அலறியபடியே அதை அழகாக கேட்ச் பிடித்தவன்...,"என் குட்டிம்மாவுக்கு எதுக்கு இவ்வளவு கோபம்....?மாமா ஏதோ தெரியாம பேசிட்டேன்.....!ஸாரி டி குட்டிம்மா.....!",அவள்...அவனிடம் மன்னிப்பு கேட்ட நிலை மாறி....அவன்....அவளிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருந்தான்.
"வாயை மூடுங்க....!குட்டிம்மா...புட்டிம்மான்னீங்க....அப்புறம் நடக்கிறதே வேற....!",வழக்கம் போல் அவனுடைய 'குட்டிம்மா....!' என்ற அழைப்பில் மயங்கிய மனதை அடக்கத் தெரியாமல்....அவனிடமே சீறினாள் அவனுடைய குட்டிம்மா....!
தான் 'குட்டிம்மா....!',என்று அழைத்தால்....அவள் மயங்கி விடுவாள் என்பதை அந்தக் கள்வனும் அறிந்துதான் வைத்திருந்தான்.வசீகரமான புன்னகையுடன் அவளை நெருங்கியவன்....நாற்காலியில் அமர்ந்திருந்தவளை அப்படியே அலேக்காகத் தூக்கிக் கொண்டு....தனது ஓய்வு அறையை நோக்கி நடந்தான்.
"ஏய்....!என்னடா பண்ற.....?என்னை விடு....!",கால்களை உதறியபடி அவன் பிடியிலிருந்து திமிற....அவன் இன்னும் நெருக்கமாக அவளைத் தன் மார்போடு இறுக்கினான்.
"விடுடா....!பொறுக்கி....!",அவள் மேலும் திமிற....அவளுடைய அழகுகள் அவன் மீது...எசகுபிசகாக மோதி அவனை இம்சித்தன.அவளோ....அதை எதையும் உணரும் நிலையில் இல்லை....!கால்களை உதைத்தபடி அவன் பிடியிலிருந்து நழுவுவதிலேயே குறியாய் இருந்தாள்.
"ஷ்.....பேபி....!இப்படி எசகுபிசகாக ஆடி என் மூடை கிளப்பி விடாதே....!அமைதியா இருந்தீன்னா....நானே உன்னை இறக்கி விடுவேன்.....!",ஒரு மாதிரிக் குரலில் அவன் கூறவும் தான்....அவனுடைய திண்மையான மார்பில்....அப்படி...இப்படி பட்டுக் கொண்டிருந்த தன் உடலைக் கவனித்தாள்.
மூச்சை இழுத்துப் பிடித்தபடி சிலையாய் சமைந்து விட்டாள் நித்திலா.தன் விழிகளால் அவன் கண்களை சிறையிட்டவள்....அந்த சிறையை மீட்கும் எண்ணமில்லாதவளாய்....அப்படியே உறைந்திருந்தாள்.
தன் காலால் உதைத்து ஓய்வு அறையின் கதவைத் திறந்தவன்.....அவளைக் கைகளில் ஏந்தியபடியே உள்ளே சென்று....அங்கிருந்த மெத்தையில் அவளைக் கிடத்தினான்.அவன்....தன்னை படுக்கையில் கிடத்தவும்தான்....அவள் சுயநினைவுக்கே வந்தாள்.
"ஏய்ய்.....!என்ன பண்றீங்க.....?",சிறு கூச்சலுடன் எழ முயற்சித்தவளை எழ விடாமல் தடுத்து....அவளருகே சரிந்து படுத்தவன்..
"நீதானே டி வாயை மூட சொன்ன....?அதுதான்...என் வாயால உன் வாயை மூடலாம்ன்னு....!",என்றபடியே அவள் இதழ்களை நோக்கி குனிய..
"டேய்....!தள்ளிப் போடா.....!போ.....!",பதறியபடியே அவனைப் பிடித்து அவள் தள்ளி விட..
"தள்ளி விடாதே டி....!சின்னக் கட்டில் தான்...!அப்புறம்....நான் கீழே விழுந்துடுவேன்.....!",அவள் தள்ளிய வேகத்தில் கீழே விழுந்து விடாமல் இருப்பதற்காக....அவளது தோளை இறுகப் பற்றியபடி அவன் கத்தினான்...
"கையை எடுடா....!முதல்ல என்னை அங்கே....இங்கேன்னு தொட்டுப் பேசறதை நிறுத்து.....!எனக்குத்தான் உன் மேல ஆசை இல்ல...!உன்னைப் பத்தின நினைப்பு இல்ல....!அப்புறம் எதுக்கு....என்னைத் தொட்டுப் பேசற....?",தன் தோளிலிருந்த அவனது கரங்களைப் பிடித்து முரட்டுத்தனமாக தள்ளி விட்டபடி அவள் கூற..
"ஸாரி டி குட்டிம்மா....!உன் மாமா தெரியாத்தனமா பேசிட்டான்....!என் குட்டிம்மாவுக்கு இந்த மாமா மேல நிறைய ஆசை இருக்கு.....!நிறைய நிறைய காதல் இருக்கு....!போதுமா....?",அவன் ஏதோ சிறு குழந்தையைக் கொஞ்சுவது போல் அவளைக் கொஞ்ச..
அவனது கொஞ்சலில் உண்மையாலுமே குழந்தையாய் மாறிய அந்த வளர்ந்த குழந்தை...'போதாது....!' என்று தலையாட்டியது.
"என் குட்டிம்மாவுக்கு இன்னும் என்ன வேணுமாம்.....?இந்த மாமாவை மன்னிக்க கூடாதா.....?என் பேபி இப்போ அழகா சிரிப்பாங்க பாருங்க....!",என்றபடியே தன் மூக்கு நுனியால் அவள் கழுத்தில் குறுகுறுப்பு மூட்ட..
தன் இரு கைகளாலும் அவன் தலைமுடியைப் பிடித்து இழுத்து தன் முகத்தைக் காணச் செய்தவள்,"நீ ஒண்ணும் என் மாமா இல்ல....!",என்றுரைக்க..
"அப்பறம் என்னவாம்.....?",அவள் கன்னங்களை வருடியபடியே அவன் வினவ..
"சொல்ல மாட்டேன் போ....!நான்தான் உன் மேல கோபமா இருக்கேன் ல....?அதனால சொல்ல மாட்டேன்....!",செல்ல ஊடல் கொண்டு சிணுங்கலாய் தலை ஆட்டியவள் அவ்வளவு அழகாக இருந்தாள்.
அவளது ஊடலில் தன்னைத் தொலைத்தவன்,"இல்லையே....!என் குட்டிம்மாவுக்கு இந்த மாமா மேல கோபம் இல்லையே.....!இந்த அழகான உதடு பொய் பேசுது....!",என்றவனின் விரல்கள் அவளது கீழுதடை அழுந்தப் பற்றியது.
"நீ ஒண்ணும் என் மாமா இல்ல.....!",அவன் விரல்களை அவள் விலக்க முயல...முடியாது போகவும்,"விடுடா....!",என்று அவன் நெஞ்சிலேயே இரண்டு அடி போட்டாள்.
"ராட்சசி....!",அவள் இதழை விடுவித்தவன்,"இப்படித்தான் உன் புருஷனை போடா...வாடான்னு கூப்பிடுவியா....?அழகா 'மாமா...!'ன்னு கூப்பிடலாம்ல.....?",அவன் தன் மனதில் இருந்த நீண்ட நாள் ஆசையை அவளிடம் தெரிவிக்க..
"ம்ஹீம்.....!"தலையாட்டினாள் அவனுடைய செல்ல ராட்சசி....!அவளுடைய கோபம் எப்பொழுதோ பறந்து போயிருந்தது.
"ஹே..ஹே....!ப்ளீஸ் டி....!நீ என்னை 'மாமா'ன்னு கூப்பிடணும்ன்னு எனக்கு எவ்வளவு ஆசை தெரியுமா.....?உன் பிரெண்ட் சுமித்ரா கூட கௌதமை 'மாமா'ன்னுதான் கூப்பிடுவா....தெரியுமா.....?",தன் கையைசைவிலே பல கட்டளைகளை நிறைவேற்றிப் பழகிய அந்த மிகப் பெரும் தொழிலதிபன்....அந்த ஒற்றை வார்த்தைக்காக...அந்த சிறு பெண்ணிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான்.
"மாமான்னு எல்லோரும்தான் கூப்பிடுவாங்க....!என் ஆதுவை நான் ஸ்பெஷலா கூப்பிட வேண்டாமா.....?",அவன் சட்டை காலர் பட்டனை பிடித்துத் திருகியபடியே அவள் வினவ...அவன் நிலையைப் பற்றி சொல்லவும் வேண்டுமோ....?மயங்கி கிறங்கிப் போனவனாய்..
"அப்படி என்ன ஸ்பெஷலா கூப்பிடுவ....?",அவன் விரல்கள் அவள் காதுமடலை மென்மையாக நீவிவிட ஆரம்பித்தன.
"சொல்லட்டுமா.....?",அவள் புருவம் உயர்த்த..
"சொல்லு......!",கிசுகிசுத்தான் அவன்.
"அத்தான்....!",அவள் கூறியே விட்டாள்.
முகச்சிவப்பும்....நாணமும் முகத்தில் போட்டி போட....மென்மையும்....காதலும் அவள் குரலில் தாண்டவமாடின....!ஒற்றை வார்த்தையில்....ஒற்றை அழைப்பில் காதலை உணர்த்தி விட முடியுமா....?தன் உள்ள காதல் மொத்தத்தையும்....ஒற்றை சொல்லுக்குள் அடக்கி....அந்தக் காதலனுக்கு உரியவனிடம் பிரயோகிக்க முடியுமா.....?முடியும்....என்றது அவளுடைய அந்த ஒற்றை அழைப்பு.....!
ஏற்கனவே....அவள் மீது காதல் பைத்தியமாய் இருப்பவன்....இப்பொழுது....பித்தாகிப் போனான்.அந்தப் பித்தை அதிகப்படுத்துவது போல் அவள் மேலும் பேச ஆரம்பித்தாள்.
"அத்தான்....!என் ஆது அத்தான்....!நான் 'மாமா...'ன்னு நிறைய பேரை கூப்பிட்டிருக்கிறேன்....!ஆனால்...அத்தான்ங்கிற வார்த்தையை என் கணவருக்காக மட்டுமே பொத்தி பொத்தி பாதுகாத்து வைச்சிருந்தேன்....!எப்படி என் மனசும்....என் உடலும் என் வருங்கால கணவனுக்காக மட்டும்தான்னு கட்டுப்பாடோட இருந்தேன்னோ....அதே மாதிரிதான்....'அத்தான்'ங்கிற இந்த வார்த்தையும் என் வருங்கால கணவருக்கு மட்டும்தான்னு உறுதியா இருந்தேன்....!கல்யாணம்...புருஷன்....காதல் அப்படிங்கிற வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிஞ்சுக்கிட்ட நாள்ல இருந்து....இந்த 'அத்தான்'ங்கிற வார்த்தையை என் வருங்கால கணவனான உங்களுக்காக சேமிச்சு வைச்சிருக்கிறேன்....!இது வெறும் வார்த்தையில்லை அத்தான்....!இது என்னுடைய காதல்...!என்னுடைய உயிரோட சத்தம்....!உங்களுக்காகத் துடிக்கிற என் இதயத்தோட துடிப்பு....!",அத்தனைக் காதலோடு கூறியவளைப் பார்த்தவன்....அவளுடைய காதலில் அப்படியே ஆடிப் போய் விட்டான்.
'அத்தான்...!' என்ற அழைப்பிற்கு பின்னால் அவளது இவ்வளவு வருடத்தினுடைய காத்திருப்பும்....காதலும் இருக்குமென்பதை அவன் அறிந்திருக்கவில்லை....!'தான் ஒருவரைக் காதலிக்கிறோம்...!' என்பதை விட....'தான் ஒருவரால் காதலிக்கப்படுகிறோம்....!' என்பது லட்சம் கோடி மகிழ்ச்சியை வாரி இறைக்கும்.அப்படிப்பட்ட மனநிலையில் இருந்தான் ஆதித்யன்....!
"தேங்க்ஸ் டி....!",அவனுக்கு அதற்கு மேல் பேச வார்த்தைகள் வரவில்லை.
"அதே மாதிரி....என்னைத் தவிர உங்களை வேறு யாரும் 'அத்தான்'ன்னு கூப்பிடக் கூடாது....!நான் மட்டும்தான் கூப்பிடுவேன்....!",சுட்டு விரலை நீட்டி அவள் எச்சரிக்க..
"நிச்சயமா டி....!வேற ஒருத்தர் கூப்பிடறதுக்கு நான் அனுமதிக்கவும் மாட்டேன்....!இந்த ஆதித்யனும்...இந்த அழைப்பும் என் குட்டிம்மாவுக்கு மட்டுமே சொந்தமானது...!",மென்மையாக அவள் நெற்றியில் இதழ் பதித்தான் ஆதித்யன்.
"ஹலோ பாஸ்....!போதும் எழுந்துறீங்க....!இதுதான் சாக்குன்னு ஹாயா என்மேல படுத்துகிட்டீங்க.....!",அவள் கழுத்தில் வாசம் பிடித்தபடி...சுகமாய் அவள் நெஞ்சுக்குழியில் முகம் புதைத்திருந்தவனைப் பார்த்துதான் அவ்வாறு கூறினாள் நித்திலா.
"ம்ப்ச்....!இன்னும் கொஞ்ச நேரம் டி....!",அவன் இன்னும் ஆழமாய் மூச்சை இழுத்து சுவாசிக்க....குறுகுறுத்த மனதை அடக்கிக் கொண்டு..
"யாராவது வந்திடப் போறாங்க ஆது....!",எச்சரித்தபடியே அவன் முகத்தை வலுக்கட்டாயமாகத் தன் மார்பில் இருந்து நிமிர்த்தினாள்.
"ம்ப்ச்....!சரியான இம்சை டி நீ....!",புலம்பியபடியே நிமிர்ந்தவனின் பார்வை பெண்ணவளின் மென்மைகளின் மீது மொய்த்தது.
அவன்....அவளைக் கட்டிலில் கிடத்திய போதே...அவளுடைய துப்பட்டா அவளிடமிருந்து விடை பெற்று ஓரமாய் சுருண்டு ஓடி விட...துப்பட்டா இல்லாத சுடிதார் அதனுடைய வேலையைக் காட்டிக் கொண்டிருந்தது.
அவளுடைய அங்க வளைவுகள் அவனை நோக்கி சரமாரியாக மலர்க் கணைகளைத் தொடுக்க...திக்கு முக்காடிப் போனான் அந்த ஆண்மகன்.அவன் பார்வையின் மாற்றத்தை உணர்ந்து கொண்டவள்...அவசர அவசரமாக தன் துப்பட்டாவை எடுத்து அணிந்து கொண்டாள்.
"ம்ப்ச்....!ஏன் டி....?",அவன் ஆட்சேபணைப் பார்வை பார்க்க..
"ம்....ஆசைதான்....!முதல்ல நகருங்க....!",அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டு விட்டு சிட்டாய் பறந்து விட்டாள் நித்திலா.
....................................................
"இனிமேலும் என்னால பொறுமையா இருக்க முடியாது டா...!என்னை என்னன்னு நினைச்சுக்கிட்டு இருக்காரு அந்த மனுஷன்....?அவருடைய வயசுக்கு மரியாதை கொடுத்து அமைதியா இருந்தால்....ரொம்பவும்தான் ஆடறாரு....!",உறுமிக் கொண்டிருந்த கௌதமை எப்படி சமாதானப்படுத்துவது என்று தெரியாமல்....ஆதித்யனும் நித்திலாவும் விழித்துக் கொண்டிருந்தனர்.
சுமித்ராவோ....பயத்தில் அழுது கொண்டிருந்தாள்.அவசர அவசரமாக சுமித்ராவிற்கு நடக்கவிருக்கும் திருமண ஏற்பாட்டை.....எப்படியோ அறிந்து கொண்ட சுமித்ராவின் அம்மா....தன் மக்களிடம் அனைத்தையும் கூறிவிட்டார்.
"இந்த விஷயத்தை உடனே கெளதம் தம்பிக்கு தெரியப்படுத்திடு ம்மா....!உன் மனசுக்குப் பிடிச்சவனோட.....உன் வாழ்க்கை நல்லாயிருக்கணும்.....!இவங்க எல்லாம் சேர்ந்து....உன்னைக் கொன்னு போடுவாங்களே தவிர....வேற சாதிப் பையனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க மாட்டாங்க.....!ஒரு அம்மாவா எனக்கு என் மகளோட சந்தோஷம்தான் முக்கியம்....!உன்னுடைய சந்தோஷத்துக்காக....உன்னுடைய உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து.....இந்த விஷயத்தை உன் காதில போட்டு வைச்சிட்டேன்.....!ஒரு அம்மாவா என் புள்ளையோட வாழ்க்கைக்காக நான் இதை செய்திட்டேன்.....!
இதுக்கு மேல....சுண்டு விரலைக் கூட என் புருஷனுக்கு எதிரா நான் அசைக்க மாட்டேன்....!அது ஒரு மனைவியா.....என் புருஷனுக்கு நான் செய்யற கடமை.....!உன்னுடைய வாழ்க்கை....இனி அந்த கெளதம் தம்பியோடதான்....!நல்லாயிரு.....!",தன் மகளின் வாழ்க்கையையும் காப்பாற்றி....அதே சமயம்....தன் கணவரையும் எதிர்க்காமல் உறுதியாய் பேசினார் அந்த வித்தியாசமான தாய்....!
அவர் கூறியதில் இருந்த மறைமுக அர்த்தம்....'உன் வாழ்க்கையை நீ எப்படியாவது காப்பாற்றிக் கொள்..' என்பதே....!தன் அம்மாவைக் கட்டிக் கொண்டு ஒரு மூச்சு அழுது தீர்த்தவள்.....தன் காதலைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தன்னவனிடம் சரணடைந்திருந்தாள்.
ஒன்றும் நடக்காததைப் போல்....அன்றும் வெகு சாதாரணமாகக் கிளம்பி அலுவலகத்திற்கு வந்தவள்....கௌதமிடம் அனைத்தையும் ஒப்பித்து விட்டாள்.அதன் விளைவு.....ஒரு முடிவு எடுப்பதற்காக அனைவரும் ஆதித்யனின் அறையில் குழுமியிருந்தனர்.இத்தனை களோபரத்திலும்....'தன்னைப் பெற்றவர்கள் முன்னிலையில்தான் தங்கள் திருமணம் நடக்க வேண்டும்....!',என்பதில் சுமித்ரா உறுதியாய் இருந்தாள்.
அழுது கொண்டிருந்தவளை உறுத்து விழித்தவன்,"இப்போ எதுக்கு டி இப்படி அழுதுக்கிட்டு இருக்க...?முதல்ல வாயை மூடு....!",என்று எரிந்து விழுந்தான் கெளதம்.அவளது தந்தையின் மீது இருந்த கோபம்....ஆத்திரம் அனைத்தும் அவள் மேல் திரும்பியது.
"இப்போ எதுக்கு டா என் தங்கச்சியை திட்டற....?சும்மா கோபத்துல 'தாம் தூம்..'ன்னு வானத்துக்கும் பூமிக்கும் குதிச்சால் மட்டும் ஒண்ணும் ஆகிடப் போறதில்ல....!அமைதியா அடுத்து என்ன பண்ணலாம்ன்னு யோசிப்போம்....!உட்காரு.....!",சிறு அதட்டலுடன் அவனை அமர வைத்தான் ஆதித்யன்.
அவனும் தன் கோபத்தை சுமித்ராவிடம் காட்டக் கூடாது என்றுதான் நினைக்கிறான்.....!ஆனால்....என்ன செய்வது....?பாவம்....!அவள் தந்தையின் மேல் இருக்கும் கோபம் முழுவதும் அவள் மீதுதான் பாய்ந்து தொலைக்கிறது.
"இன்னும் என்னடா பொறுமையா இருக்கறது.....?நான் யாருன்னு காட்டாம...அந்த மனுஷன் அடங்க மாட்டாரு.....!",கெளதம் பொறுமிக் கொண்டிருக்க....நித்திலா இடை புகுந்தாள்.
"அண்ணா....!உங்களுடைய கோபம் எனக்குப் புரியுது....!",அவள் ஏதோ பேச வாயெடுக்கவும்..
"இல்லைம்மா.....!நான் முடிவு எடுத்துட்டேன்.....!இனியும் அவருக்கு டைம் கொடுக்கிறதா இல்லை.....!",என்றவன் சுமித்ராவிடம் திரும்பி..
"ஏய்ய்.....!இன்னைக்கு ஈவ்னிங் ஆறு மணிக்கு உன் அப்பாவை சுவை ஹோட்டலுக்கு வரச் சொல்லு.....!",என்று கட்டளையிட..
ஏற்கனவே பயந்து கொண்டிருந்தவள்....அவனுடைய இந்தக் கட்டளையில் மேலும் பயந்து போனாள்.
"அப்பாவையா.....?எ....எதுக்கு.....?",
"ம்....உட்கார்ந்து விருந்து சாப்பிடத்தான்.....!",அவன் சுள்ளென்று விழவும்....அவள் மேலும் அழ ஆரம்பித்தாள்.
"டேய்....!நீ ரொம்பவும்தான் டா அந்தப் பொண்ணை போட்டு திட்டற....?உன் கோபத்தை அவ அப்பா மேல காட்டு.....!அவ மேல காட்டாதே....!",ஆதித்யனின் கண்டிப்பில் அவன் சற்று அமைதியானான்.
"ப்ச்.....!",தன் தலையை அழுந்தக் கோதி தன் கோபத்தைக் கட்டுப்படுத்தியவன்..
"ஸாரி டா சுமி.....!நானும் எவ்வளவோ ட்ரை பண்றேன்.....!இருந்தாலும்....என் டென்க்ஷனும்...கோபமும் உன் மேலதான் திரும்புது.....!ஸாரி டா....!",உண்மையிலும் மனம் உருகி மன்னிப்பு கேட்டவன்..
"இன்னைக்கு ஆறு மணிக்கு உன் அப்பாவை அங்கே வரச் சொல்லு.....!அப்படி அவர் வரலைன்னா....6.30 மணிக்கு நான் அவரோட வீட்டில இருப்பேன்னு சொல்லு.....!கண்டிப்பா வந்திடுவாரு....!",என்றான் அமைதியாக.
"ம்....வரச் சொல்றேன்....!ஆனால்....கொஞ்சம் பொறுமையா பேசுங்க மாமா....!எனக்காக...!ப்ளீஸ்....!",கண்களில் கண்ணீருடன் அவள் கெஞ்ச...அவளுடைய 'எனக்காக..' என்ற வார்த்தை அவனை சற்று அசைத்துப் பார்த்தது.
"சரி டா...!உனக்காக கொஞ்சம் பொறுமையா நடந்துக்க முயற்சி பண்ணறேன்.....!நீ எதைப் பற்றியும் கவலைப்படாம.....ரிலாக்ஸ்டா இரு.....!முதல்ல....இப்படி எதுக்கெடுத்தாலும் அழுவதை நிறுத்து.....!",காதலுடன் அவன் கூற..
அவளும் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு அவனைப் பார்த்து புன்னகைத்தாள் காதலாக....!இவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்த ஆதித்யனும் நித்திலாவும் ஒருவரையொருவர் விழிகளால் பருகிக் கொண்டனர் காதலாக....!
"சரி டா மச்சான்.....!நான் போய் என் வேலையைப் பார்க்கிறேன்.....!வர்றேன் ம்மா நித்தி....!",என்றபடி வெளியேறப் போன கௌதமை..
"ஒரு நிமிஷம் மாமா.....!",என்ற சுமித்ராவின் குரல் தடுத்து நிறுத்தியது.
கேள்வியாய் தன் முகம் நோக்கியவனை....கலக்கத்துடன் ஏறிட்டவள்,"மாமா....!நீங்க எனக்கு பண்ணிக் கொடுத்த சத்தியத்தை மறக்கலையே.....?என் அம்மா அப்பா சம்மதத்தோடதான் நம்ம கல்யாணம் நடக்கும்ன்னு நீங்க சொல்லியிருக்கீங்க....!",அவள் கூறவும்...அவனுக்குப் போன கோபம் சுர்ரென்று வந்து சேர்ந்தது.
"மறக்கலை டி.....!அந்த ஒரு சத்தியத்தை பண்ணிக் கொடுத்திட்டுத்தானே....இப்போ நாய் மாதிரி அலைஞ்சுக்கிட்டு இருக்கேன்.....!அது மட்டுமா....கண்டவன்கிட்டேயெல்லாம் கண்ட பேச்சையெல்லாம் வாங்கிக்கிட்டு இருக்கேன்.....!நீ சந்தோஷமா....கெட்டியா அந்த சத்தியத்தையே பிடுச்சுக்கிட்டுத் தொங்கிக்கிட்டு இரு....!அதை நிறைவேத்தி வைக்கத்தான் இந்த இளிச்சவாயன் இருக்கிறானே......!",அந்த சத்தியம் மட்டும் குறுக்கே நிற்கவில்லை என்றால்.....அவன்....அவளை இந்நேரம் தூக்கிச் சென்று தாலி கட்டியிருப்பான்.அதற்குத் தடையாக இருந்த அந்த சத்தியத்தின் மீது அவனுக்கு கோபம் கோபமாக வந்தது.
அதை அவள் ஞாபகப்படுத்தவும்....ஏற்கனவே கொதித்துக் கொண்டிருந்தவன் மேலும் கொதிநிலைக்குப் போய்....அவள் மீது எரிந்து விழுந்தான்.
அவள் மெளனமாக கண்ணீர் வடிப்பதைக் கண்டு...."ஆ...ஊன்னா கண்ணுல கட்டி வைச்சிருக்கிற டேமை திறந்து விட்டுடு....!",அதற்கும் அவளையே திட்டிவிட்டு வெளியேறினான் அந்தக் காதல் பைத்தியக்காரன்.....!
அதன் பிறகு....சுமித்ராவை சமாதானப்படுத்தி அனுப்பி வைப்பதற்குள்...ஆதித்யனுக்கும் நித்திலாவிற்கும் போதும்....போதுமென்றாகி விட்டது.
"உஷ்.....!ஷப்பா....!இப்பவே கண்ணைக் கட்டுதே.....!ஆமாம் ஆது....!இந்த மாதிரி சத்தியத்தை நான் உங்ககிட்ட வாங்கியிருந்தா....நீங்க என்ன பண்ணியிருப்பீங்க....?"ஆர்வத்துடன் நித்திலா கேட்க..
"எந்த ஒரு சத்தியத்தாலேயும் இந்த ஆதித்யனைக் கட்டுப்படுத்த முடியாது பேபி....!அதுவும் உன் விஷயத்துல....நெவர்....!",அசால்ட்டாகத் தோளைக் குலுக்கியவனின் காதலில் தெரிந்தே தொலைந்து போனாள் அந்த மங்கை....!
"முரடு.....!சரியான முரட்டுப் பையா....!காதலிலும் முரடு....முத்தத்திலும் முரடு....!",அவள் முணுமுணுக்க...அந்த முரட்டுக்காரனின் காதில் அது தெளிவாக விழுந்து வைத்தது.
"முத்தத்தில மட்டும் இல்ல பேபி....!மத்ததிலேயும் முரடுதான்.....!வேணும்ன்னா ஒரு ட்ரையல் பார்க்கலாமா.....?",குறும்பாக அவன் கண்ணைச் சிமிட்ட..
"உதை விழும்....!வேலையைப் பாருடா....!",போலியாக அவனை மிரட்டியபடியே தனது இருக்கைக்கு ஓடி விட்டாள் நித்திலா.
அகம் தொட வருவான்....!!!
கருத்துகள்
கருத்துரையிடுக