எவனோ என் அகம் தொட்டு விட்டான் - அகம் 57
அத்தியாயம் 57 : "கொஞ்சம் தள்ளித்தான் உட்காருங்களேன்....!",தன்னருகே பசை போட்டு ஓட்டியதைப் போல் உரசிக் கொண்டு அமர்ந்திருந்த ஆதித்யனைப் பார்த்து பல்லைக் கடித்தாள் நித்திலா. "நீ சொன்ன பிறகு...நான் தள்ளி உட்காராம இருப்பேனா பேபி....!",அவள் காதருகில் கிசுகிசுத்தவன் அவளிடம் நெருங்கி ஒட்டி உரசிக் கொண்டு அமர்ந்தான். "அய்யோ...!நான் அந்தப் பக்கம் தள்ளி உட்கார சொன்னேன்....!",அதற்கு மேல் நகர்ந்து அமர முடியாதபடி கார்க்கதவு அவளைத் தடுக்க...முன்னால் காரை ஓட்டிக் கொண்டிருந்த கேசவனுக்கும்...அவனருகில் அமர்ந்திருந்த தீபிகாவிற்கும் எதுவும் கேட்டு விடக் கூடாது என் மெல்லிய குரலில் முணுமுணுத்தாள். "எனக்கு இந்த பக்கம்தான் வசதி பேபி....!",என்றபடி மேலும் ஒட்டி உராய்ந்தவனைக் கண்டு அவளால் பல்லைக் கடிக்கத்தான் முடிந்தது. ஆதித்யனும்...நித்திலாவும் மறு வீட்டு விருந்திற்காக கோவை வந்து ஒரு நாளாகிறது.வீட்டு மாப்பிள்ளை என்ற முறையில் எந்தவொரு குறையும் வைக்காமல் பார்த்து பார்த்து உபசரித்தார் மீனாட்சி.ஆனால்...மகளிடம் முகம் கொடுத்துக் கூட பேச மறுத்துவிட்டார்.ஆதித்யனிடம் கூட...